துபாயின் மோட்டார் சிட்டி பகுதியில் நேற்று இரவு மழை பெய்ததன் காரணமாக சாலைகள் வழுக்கத் துவங்கியிருக்கின்றன. இதனால் அச்சாலையைப் பயன்படுத்திய டெலிவரி டிரைவர்கள் சிலர் சாலைகளில் வழுக்கி விழுந்தனர்.
அங்குள்ள மக்கள் உடனடியாக அவர்களை தூக்கிவிட்டு, நிதானமடையைச் செய்திருக்கின்றனர். அவர்களுக்கு தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றையும் பொதுமக்கள் வழங்கியிருக்கின்றனர்.
சம்பவத்தை நேரில் பார்த்ததும் ஓடிச்சென்று டெலிவரி டிரைவர்களுக்கு உதவிய ஒருவர் இதுபற்றிப் பேசுகையில்,” மழை, பனி எனப் பார்க்காமல் இவர்கள் (டெலிவரி டிரைவர்கள்) நமக்காக உழைக்கின்றனர். நாம் அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யவேண்டும்” என்றார்.
மழைநேரங்களில் வாகனவோட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்கவேண்டும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
View this post on Instagram
