மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி அமீரகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு மூளையாக தாவூத் இப்ராஹிம் செயல்பட்டதாகவும் தற்போது இவர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அமீரகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய நண்பரான இவர் ஆயுதம் மற்றும் வெடிப்பொருள் தயாரிப்பதில் பயிற்சி பெற்றவர். மும்பையில் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக துபாயில் உள்ள தாவூத் இப்ராஹிம் வீட்டில் சதித்திட்டத்தில் ஈடுபட்டவர்.
தற்போது இவர் அரபு நாடுகளில் இருந்து மும்பைக்கு எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களில் தங்கம் கடத்தி வருவதாகவவும் கைதான அபுபக்கரை விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
