ஐக்கிய அரபு அமீரக உணவகத்தில் கத்தி குத்து; ஒருவர் பலி..!

Murder in UAE
Murder in UAE restaurant: Expat stabbed repeatedly by friend (Photo: Khaleej Times)

அஜ்மானில் உள்ள ஒரு உணவகத்தில் 38 வயதான ஆசியாவை சேர்ந்த ஒரு நபரை, அதே நாட்டை சேர்ந்த அவரின் நண்பர் கொலை செய்ததற்காக அஜ்மான் போலீஸ் அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும், கொலை செய்யப்பட்டவரின் உடலில் பல குத்து காயங்கள் இருந்ததாக அதிகாரிகள் கலீஜ் டைம்ஸிடம் தெரிவித்துள்ளது.

துபாய் காவல்துறையின் உதவியோடு, கொலை செய்தவரை காவல்துறையினர் அடையாளம் கண்டு சம்பவம் நடந்த 18 மணி நேரத்திற்கு பிறகு அவரை கைது செய்தனர். நாட்டை விட்டு வெளியேறுவதற்காக துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு டாக்ஸியில் ஏறிச் செல்ல முயன்றபோது அந்த நபர் பிடிபட்டார்.

அஜ்மானில் உள்ள முசலா மைதானத்திற்கு (Mussala Ground) அருகே உள்ள அல்-லிவாராவின் முதல் பகுதியில் (Al-Liywara 1 area) நடந்த ஒரு கொலை குறித்து ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் தங்களுக்கு அழைப்பு வந்ததாக அஜ்மான் காவல்துறையின் இயக்குநர் CID Lt Col அகமது சயீத் அல்-நுவைமி தெரிவித்தார்.

அதன் பின்னர் தடயவியல் துறை, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட குழு குற்றம் நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தில் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றம் நடந்த இடத்தில் இருந்தவர்களை காவல்துறையினர் விசாரித்தனர். அதில் பாதிக்கப்பட்டவருடன் உணவகத்தில் மேலும் மூன்று பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

திடீரென்று, அவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்டவரை கத்தியால் தாக்கியும், மேலும் பல முறை குத்தியதாக கலீஜ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. பின்னர், அவர் தனது கூட்டாளிகளுடன் ஒரு டாக்ஸியில் ஏறி சம்பவம் நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடியதாக தெரிவித்துள்ளது.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம், ஒரு வெள்ளை கத்தியை  போலீசார் பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து, கூட்டாளிகளும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

புர் துபாயில் (Bur Dubai) துபாய் போலீசாருடன் ஒருங்கிணைந்து குற்றவாளிகளை கைது செய்ததாக அல்-நுவைமி தெரிவித்தார்.

Source : Khaleej Times

Loading...