துபாய் மக்களின் கண்களை கவரும் வகையில் மிக வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டது தான் சேக் ஜைத் சாலையில் உள்ள “மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர்” அருங்காட்சியகம்.
உலகின் மிக அழகிய அருங்காட்சியகங்களில் துபாயின் இந்த ‘மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர்’ ஒன்று. இந்த அருங்காட்சியகம் 22.02.2022 அன்று திறக்கப்படும் என துபாய் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
சில தினங்களுக்கு முன் விண்கலம் தோற்றம் அளிக்கும் ஒரு பறக்கும் பொருள், மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர் அருங்காட்சியகத்தில் தரையிறங்குவது போன்ற வீடியோ ஒன்றை துபாய் அரசு ஊடக பகிர்ந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் தற்போது அந்த அருங்காட்சியகத்தின் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ்களை ஜெட்பேக்கில் ஒருவர் துபாய் முழுவதும் பறந்து சென்று வழங்கி வரும் வகையில் நம்பமுடியாத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
‘ரியல் லைஃப் அயர்ன் மேன்’ என்று அழைக்கப்படும் இவரது பெயர் ரிச்சர்ட் பிரவுனிங். பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த இவர் மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர் அருங்காட்சியகத்திற்கான அழைப்பிதழ்களை துபாய் முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களுக்கு பறந்து சென்று வழங்கியுள்ளார்.
ரிச்சர்ட் பிரவுனிங், துபாய் டவுன்டவுன், புர்ஜ் கலீஃபா, துபாய் மெரினா, ஐன் துபாய் என முக்கிய சுற்றுலா தளங்களுக்கு அழைப்பிதழ்களை விநியோகிக்க பறந்து சென்றார். அப்போது அவர் பறந்து வருவதை கண்டு உற்சாகமடைந்த மக்கள் வீடியோ மற்றும் செல்ஃபிகளை எடுத்துக்கொண்டனர்.
المخترع البريطاني ريتشارد براوننج والملقب بالرجل الحديدي الطائر انطلق من متحف المستقبل وحلق في سماء دبي لتوزيع دعوات خاصة لزيارته #متحف_المستقبل #أجمل_مبنى_على_وجه_الأرض pic.twitter.com/2vsQSCGkTS
— Khaled AlShehhi (@KhaledAlShehhi) February 20, 2022
துபாயின் ‘மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர்’அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.motf.ae-ல் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். பார்வையாளர்கள் 23-02-2022 முதல் அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை காணலம்.
இதுவரை யாரும் கண்டிடாத விதத்தில் வலைவான வட்ட வடிவில் அமைந்துள்ளதால் காண்போருக்கு என்ன கட்டிடம் என்றுக் கூட தெரியாமல் இருந்தது. அந்த அருங்காட்சியகத்தின் வெளிப்பகுதியில் அரபு மொழிகளால் பொறிக்கப்பட்டு, அதிலிருந்து ஒளி வருவதுபோல இருப்பதால் காண்போரின் கண்களை கவர்ந்து இழுக்கிறது.