துபாயின் 72வது வாராந்திர மஹ்சூஸ் ரேஃபிள் டிராவில் இந்தியர் ஒருவர் 1 லட்சம் திர்ஹம்ஸை பரிசாக வென்று அசத்தியுள்ளார்.
இது குறித்து வெற்றிபெற்ற இந்தியர் முகமது கூறுகையில், எனது பிரார்த்தனைகளுக்கு பதில் தான், இந்த மஹ்சூஸ் ரேஃபிள் டிரா வெற்றி.
“சனிக்கிழமை மாலைப் பிரார்த்தனைக்குப் பிறகு எனது மெயிலை சோதித்து பார்த்தேன், அப்போதுதான் நான் வெற்றி பெற்றதாக தெரிந்துகொண்டேன். தான் வெற்றிபெற்ற அறிவிப்பை கண்டதும் அதிர்ச்சியும் உற்சாகமும் அடைந்தேன். இதை என்னால் நம்ப கூட முடியவில்லை” என்றார்.
ரமலான் என்பது கொடுப்பதற்கான மாதம், இதுவே நான் பெற்ற சிறந்த பரிசு என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் முகமது.