UAE Tamil Web

அமீரக தேசிய தினம்: 7 எமிரேட்களின் ஆட்சியாளர்களும் ஒரே வீடியோவில் தோன்றி அசத்தல்..!

Sheik Mohammed

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அமீரக மக்கள் மற்றும் தலைவர்கள் அனைவருக்கும் தேசிய தின வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisment -

தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேக் முகமது,”நாட்டை ஸ்தாபிப்பதில் உள்ள சவால்கள், விசுவாசமுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் தியாகங்கள் ஆகியவற்றை நாங்கள் நினைவில் கொள்கிறோம். அதற்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். நம் நாட்டிற்கு சிறந்த மற்றும் அழகான எதிர்காலத்தை உருவாக்குவோம். அல்லாஹ் ஐக்கிய அரபு அமீரகத்தையும் அதன் மக்களையும் பாதுகாக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

7 எமிரேட்களின் ஆட்சியாளர்கள் மற்றும் குழந்தைகள் சிறிய மரக்கன்றுகளை நடும் வீடியோ ஒன்றையும் ஷேக் முகமது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அல் நஹ்யான்

அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்டையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களுக்கு தேசிய தின வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

“அமீரகத்தின் 49 வது தேசிய தினத்தன்று, எங்கள் யூனியனின் விதைகளை விதைத்தவர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இதுவரை நாம் அடைந்ததைப் பற்றி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், மேலும் நாட்டை எப்போதும் பிரகாசமான எதிர்காலத்திற்கு கொண்டு செல்வதன் மூலம் நம் முன்னோர்களுக்கு மதிப்பளிப்போம்” என அல் நஹ்யான் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

துபாய் ஆட்சியாளர் வெளியிட்ட அதே வீடியோவை அல் நஹ்யான் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஷேக் ஹம்தான்

அமீரக மக்களுக்கு தேசிய தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாக கவுன்சிலின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஷேக் ஹம்தான் தனது ட்விட்டர் பக்கத்தில், “தேசிய தினத்தன்று, இந்த மாபெரும் ஒன்றியத்தை நிறுவிய ஸ்தாபக பிதாக்களின் தியாகங்களை நாம் நினைவில் கொள்வோம். இந்நாளில் புத்திசாலித்தனமான தலைமைத்துவத்தையும் நமது விலைமதிப்பற்ற தேச மக்களையும் வாழ்த்துகிறோம். ஒருபோதும் சாத்தியமற்றதை நம்பாத நாட்டின் மாபெரும் பயணத்திற்கு – அரேபியர்களுக்கும் உலகிற்கும் ஒரு சிறந்த முன்மாதிரியை வழங்கிய நாடு, சவால்களை முறியடித்து, அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிய நாடு அமீரகம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.