UAE Tamil Web

தினந்தோறும் 500 பேருக்கு 500 திர்ஹம்ஸ் : பிரபல ஷாப்பிங் மாலின் அதிரடி ஆஃபர்..!

A shopper is seen at the local drinks production section of Ardis supermarket in Algiers

அமீரகத்தின் பிரபல ஷாப்பிங் மாலான கேரிஃபோர், அமீரகத்தின் 50 வது தேசிய தினத்தை முன்னிட்டு பல்வேறு ஆஃபர்களை அறிவித்துள்ளது. மஜீத் அல் புட்டைம் குழுமத்தால் நடத்தப்படும் கேரிஃபோர் தினந்தோறும் 500 வாடிக்கையாளர்களுக்கு 500 திர்ஹம்ஸ் வெல்லும் வாய்ப்பை அளிக்க இருக்கிறது.

மேலும், டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெறும் பிரம்மாண்ட டிராவில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் 5 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு 50,000 திர்ஹம்ஸ் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், சமையல் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், உணவு மற்றும் பழங்கள் என 500 வகையான பொருட்களுக்கு 50% தள்ளுபடியும் வழங்கப்படும் என கேரிஃபோர் அறிவித்திருக்கிறது.

அமீரக தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில் தனது 5000 வாடிக்கையாளர்களுக்கு 2.5 மில்லியன் திர்ஹம்ஸ் வரையில் பரிசுகளை அளிக்க இருக்கிறது இந்த நிறுவனம்.

முக்கியமாக டிசம்பர் 2 – 4 ஆம் தேதிகளில் ஷார்ஜா, அபுதாபி, துபாய், அஜ்மான் ஆகிய இடங்களில் கேரிஃபோர் அமைந்துள்ள இடங்களுக்கு அருகில் இலவசமாக மக்களுக்கு ஐஸ்க்ரீம் வழங்கப்பட இருக்கிறது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap