UAE Tamil Web

தேசிய தினம்: ட்ரக் மற்றும் பேருந்துகளை இயக்கத் தடை விதித்த அபுதாபி காவல்துறை..!

Truck

50 வது அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு, அபுதாபி தீவிற்கு ட்ரக், தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி – தீவு இடையேயான கனரக வாகனங்களுக்கான போக்குவரத்துத்தடை டிசம்பர் 2 – 4 ஆம் தேதிவரையில் அமலில் இருக்கும்.

தீவின் நுழைவாயில்கள் ஷேக் சயீத் பாலம், ஷேக் கலீபா பாலம் முசாஃபா பாலம் மற்றும் அல் மக்தா பாலம் உட்பட பிரதான நிலப்பகுதியை இணைக்கும் நான்கு பாலங்களை கனரக வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார நிறுவனங்களின் வாகனங்கள் மற்றும் முக்கிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இந்தத் தடையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிஸ்டம் மூலமாக, போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap