34.3 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

ரமலானை முன்னிட்டு அமீரகத்தில் நடைபெற்று வந்த தேசிய சுத்திகரிப்பு திட்டத்தின் நேரம் மாற்றியமைப்பு.!

sterlisation

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அமீரகம் முழுவதும் தேசிய சுத்திகரிப்பு பணி இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரையிலும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ரமலான் மாதம் நாளை தொடங்குவதை முன்னிட்டு தேசிய சுத்திகரிப்பு திட்டத்தின் நேரம் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் அவசர மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது. ரமலான் மாதத்திற்கு ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரங்களில் உணவு விற்பனை நிலையங்கள் உணவு விற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கோ-ஆபரேட்டிவ் சொசைட்டி, மளிகை கடைகள் (Groceries), சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் மருந்தகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீன் கடைகள், இறைச்சி கடைகள், காய்கறி மற்றும் பழக்கடைகள், ரோஸ்டரிகள்(roasteries), ஆலைகள், தேநீர் & காபி வர்த்தக கடைகள், நட்ஸ் வர்த்தகர்கள், இனிப்பு, சாக்லேட் விற்பனை செய்யும் கடைகள் போன்றவைகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகளும் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பணிபுரியும் பணியாளர்கள் 30 சதவீதத்திற்கு மிகாமலும் மற்றும் சமூக இடைவெளியை 2 மீட்டருக்கு குறையாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவசர காலங்களில் தவிர மக்கள் யாரும் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டாம் என்றும், குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலனுக்காக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், ரமலான் காலங்களில் குடும்ப உறுப்பினர்களின் வருகைகள் மற்றும் ஒன்று கூடலை தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் பின்பற்றக்கூடிய வணக்க வழிபாடுகளை தங்களின் வீடுகளிலேயே கடைபிடிக்குமாறும், அவசர காலங்களுக்காகவோ அல்லது அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காகவோ வீட்டை விட்டு வெளியேறினால் கையுறைகள் மற்றும் முகமூடிகளை கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!