அபுதாபியின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மூடுபனி நிலவிய நிலையில் தேசிய வானிலை ஆய்வு மையமான (NCM) சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
அமீரகத்தில் தற்போது பல பகுதிகளில் வானிலை தெளிவடைந்து வருகிறது. துபாயில் இன்று காலை வெப்பநிலை சுமார் 20 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது.
NCM அறிவிப்பின்படி, நேற்று செவ்வாய் மாலை வெப்பநிலையில் வீழ்ச்சியடைந்ததால், இன்று வானம் சில மேக மூட்டத்துடன் காணப்படும். துபாய் மற்றும் ஷார்ஜா உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலையாக 17-21 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று NCM தெரிவித்துள்ளது.
View this post on Instagram
நாட்டின் உள் பகுதிகளில் வெப்பநிலை குறைந்து 13-18 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் மலைப் பகுதிகளில் வெப்பநிலை 10-14 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4:45 மணியளவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக அல் ஐனில் உள்ள ரக்னா பகுதியில் 6.7 டிகிரி செல்சியஸ் பதிவானது. மேலும் இன்று இரவு முதல் (வியாழன்) நாளை காலை வரை ஈரப்பதம் அதிகரிக்கும் என்பதால் உள் பகுதிகளில் மூடுபனி உருவாக வாய்ப்பிருப்பதாக NCM கூறியுள்ளது.
அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் சில நேரங்களில் லேசான முதல் மிதமான காற்று வீசக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.