அமீரகத்தில் இன்று பலத்த காற்றின் காரணமாக தூசிகள் வீசக்கூடுவதோடு கடல் சீற்றமும் ஏற்படும் என தேசிய வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேசிய வானிலை ஆய்வு மையமான NCM கூறியதாவது, அமீரகம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். துபாய், ஷார்ஜா மற்றும் ராசல் கைமா போன்ற கடலோர மற்றும் வடக்கு பகுதிகளில் மழை மேகங்கள் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிக்கு 15-25 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும், சில சமயங்களில் மணிக்கு 45 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். காற்றின் காரணமாக தூசி அதிகளவில் வீசக்கூடும்.
View this post on Instagram
இந்நிலையில் தூசி பார்வைக்கு இடையூறாக இருக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக சாலையில் செல்ல வேண்டும். மேலும் அலர்ஜியால் அவதிப்படுபவர்கள் வெளியில் செல்லும்போது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்த கடல் சீற்றத்தால் 6 அடி உயரத்திற்கு அலைகள் உருவாகும் என NCM எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக வெப்பநிலை குறையும். சராசரி வெப்பநிலை 20 டிகிரயாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரியாகவும் குறையும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
துபாயில் தற்போது 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.