UAE Tamil Web

அமீரகத்தில் நீட் தேர்வு நடைபெறும் இடம் அறிவிப்பு… மாணவர்கள் இதையெல்லாம் மறக்கவேண்டாம்..!

Students sit inside an exam centre to appear for the NEET exam,

இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய பிரிவுகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அமீரக வாழ் இந்திய மாணவர்களுக்கு அமீரகத்திலேயே நீட் தேர்வு மையம் அமைத்தல் வேண்டும் என பல தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்த நிலையில், ஔத் மேத்தா சாலையில் உள்ள இந்தியன் ஹை ஸ்கூலில் இந்தாண்டுக்கான நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இந்த அறிவிப்பினை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தேர்வானது செப்டம்பர் 12 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 12.30 மணிமுதல் 3.30 மணிவரையில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

OMR ஷீட்டில் பேனா கொண்டு விடைகள் எழுதப்பட வேண்டும். பள்ளியின் 4, 5 மற்றும் 6 கேட்கள் வழியாக காலை 9 மணிமுதல் 12 மணிவரையில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

மாணவர்கள் நண்பகல் 12 மணிக்கு மேல் பள்ளியினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அதனை கருத்தில்கொண்டு சீக்கிரமாக வீட்டில் இருந்து கிளம்பவும் துணைத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

தேசிய தேர்வு முகமையின் (NTA) இணையதளத்திற்குச் சென்று மாணவர்கள் தங்களுக்கான நுழைவு அட்டையை டவுன்லோடு செய்து கொண்டுவரவேண்டும். மேலும் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளை மாணவர்கள் கட்டாயம் பின்பற்றவேண்டும் என துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் கட்டாயம் எடுத்துவரவேண்டியவை

  • அனுமதி அட்டையுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட்டிருக்கவேண்டும்.
  • வருகை பதிவேட்டில் ஒட்ட ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் எடுத்துவரவேண்டும்.
  • செல்லுபடியாகும் அடையாள அட்டை கையில் இருக்கவேண்டும்.
  • வெள்ளை நிற பின்புலத்தில் போஸ்ட் கார்டு அளவில்  (4”X6”) எடுக்கப்பட்ட வண்ண புகைப்படம் ஒன்றினையும் அனுமதி அட்டையுடன் சேர்த்து தேர்வு கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கவேண்டும்.
  • தேர்வறையில் தேவை ஏற்பட்டால் தங்களது அனுமதி அட்டையை காண்பிக்கவேண்டும்.
சில விதிமுறைகள்

மாணவர்கள் கட்டாய சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

தேர்வு அறைக்குள் நுழைவதற்கு முன்னர் மாணவர்களுக்கு வெப்ப பரிசோதனை நடத்தப்படும். அமீரக அரசு விதித்துள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுமையாக பின்பற்றப்படும்.

தேர்வு மையத்திற்கு அருகில் கார் பார்கிங் இல்லாததால் பெற்றோர் பிற கேட்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Students sit inside an exam centre to appear for the NEET exam,
3 Shares
Share via
Copy link