பொது இடங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகளுக்குச் செல்பவர்கள் தங்களது Alhosn அப்ளிகேஷனில் கிரீன் ஸ்டேட்டஸ் மற்றும் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட நெகட்டிவ் கொரோனா சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த கால அளவை 96 மணிநேரமாக உயர்த்துவதாக அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.
அதேநேரத்தில் மக்கள் முகக்கவசம் அணிதலை தவிர்த்தல் கூடாது எனவும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. அமீரகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 100 க்கும் கீழே பதிவாவது தான் இதற்குக் காரணம் என நம்பப்படுகிறது.
Abu Dhabi Emergency, Crisis and Disasters Committee has updated entry requirements for events and exhibitions, including those related to business, entertainment and sport, effective Sunday, 31 October 2021. pic.twitter.com/SqoT0HPVTQ
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) October 30, 2021
