சின்னத்திரையில் திரைக்கதை எழுத்தாளராக தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் பிரபல இயக்குனர் நெல்சன் திலீப்குமார். கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் தான் அவர் தனது திரையுலக பயணத்தை துவங்கினர்.
அதன் பிறகு பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தை இயக்கிய நிலையில் அடுத்ததாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜயை வைத்து Beast என்ற படத்தை இயக்கினார். ஆனால் எதிர்பார்த்த அளவில் படம் வெற்றி பெறாத நிலையில் விஜயின் ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தில் மூழ்கினர்.
இந்நிலையில் அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் மைய ஈர்ப்பாக கருதப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அவரது 169வது படத்தை இயக்கவுள்ளார் நெல்சன். ஆனால் Beast பட சறுக்கலை தொடர்ந்து தலைவர் 169 கைவிடப்படும் என்ற சில வதந்திகள் எழுந்த நிலையில் இறுதியில் படம் உறுதியானது.
ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றது. Beast திரைப்படத்தில் தவறவிட்டதை முழுமையாக தலைவர் 169 படத்தில் சரிசெய்ய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு காட்சியையும் சிறப்பான வகையில் வடிவமைத்து வருகிறாராம் நெல்சன்.
இதற்கிடையில் ஓய்வெடுக்க தனது ஆஸ்தான குழு மற்றும் குடும்பத்துடன் தற்போது துபாய் வந்துள்ளார் நெல்சன். அவரது மனைவி மோனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தலைவர் 169 திரைப்படம் 2023ம் ஆண்டு சம்மருக்கு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.