கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அபுதாபியின் எல்லைப் பகுதிகளில் EDE ஸ்கேன் செண்டர்களை அமைத்துள்ளது அரசு. ஞாயிற்றுக்கிழமை (19 டிசம்பர்) இன்றுமுதல் அபுதாபி வருபவர்கள் அனைவரும் இந்த ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே எமிரேட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் முன்னர் தெரிவித்திருந்தது.
நபர் ஒருவருக்கு இந்த ஸ்கேன் செய்ய 2 நொடிகள் ஆவதாக இன்று அபுதாபி பயணித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக கண்டறிய இந்த EDE ஸ்கேன் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒருவருக்கு நோய்த்தொற்று இருக்கிறது என்பது தெரியவந்தால் அவர் இலவச ஆண்டிஜன் டெஸ்ட் எடுக்க அறிவுறுத்தப்படுவார் என ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதற்கான முடிவுகள் 20 நிமிடங்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
EDE என்றால் என்ன?
இண்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனியின் உதவியுடன் EDE குறித்த அபுதாபி ஆய்வகம் (EDE Research Institute AbuDhabi) இந்த ஸ்கேனிங் கருவியை உருவாக்கியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் RNA வில் ஏற்படும் மாறுபாட்டை மின்காந்த அலைகளின் உதவியுடன் இக்கருவி துல்லியத்துடன் கண்டறியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.