UAE Tamil Web

புதிய குவாரன்டைன் அறிவிப்பால் அமீரகத்திலிருந்து இந்தியா வர வெகுவாக குறைந்த விமான கட்டணம்!

அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கான விமானக் கட்டணம் 250 திர்ஹம்ஸாக வெகுவாகக் குறைந்துள்ளது.

இந்திய நாட்டில் ஒமைக்ரானின் பரவலை தடுப்பதற்காக சர்வதேச பயணிகளுக்கு ஏழு நாள் தனிமைப்படுத்துதல் திட்டத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்திய பின், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன.

இரு நாடுகளுக்கு இடையேயான பயணத்தில் ஏற்பட்ட சரிவு காரணமாகவும்,  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வரும் குடும்பங்கள் மற்றும் வணிகப் பயணிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குத் திரும்புவது குறித்த நிச்சயமற்ற நிலையில் நீடித்து வருவதாலும், பலர் தங்கள் பயணங்களை ரத்து செய்ததாலும்,விமானக் கட்டணங்கள் கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளதாக துபாய் பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து சர்வதேச பயணிகளும் இந்தியா வந்தவுடன் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. பின்னர், அவர்கள் எட்டாவது நாளில் மீண்டும் பிசிஆர் பரிசோதனை செய்து முடிவை ஏர் சுவிதா போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும். முடிவுகள் அந்தந்த இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் கண்காணிக்கப்படும்.

இந்தியாவின் சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக 150,000 புதிய கோவிட் -19 நோய்த் தொற்றுகளை பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் தெற்காசியாவில் ஒமைக்ரான் நோயாளிகள் எண்ணிக்கை 3,623 ஆக அதிகரித்துள்ளது.

புளூட்டோ டிராவல்ஸ் நிர்வாக இயக்குனர் அவினாஷ் அட்னானி கூறுகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா இடையே பயணிக்கும் வணிகர்கள் மற்றும் சராசரி மக்கள் இந்த அறிவிப்பின் மூலம் இந்தியாவிற்கு சென்ற பிறகு மீண்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு திரும்ப முடியுமா என்ற தெளிவில்லாத நிலையில் உள்ளனர்.

“இரண்டு நாட்கள் இந்தியாவுக்குப் பயணம் செய்தால், ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். எட்டாவது நாளில், PCR பரிசோதனை செய்து பதிவேற்ற வேண்டும்” என்று அறிக்கையில் பல குழப்பங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஒருவேளை இந்தியாவிற்கு சென்று, ஒரு வீட்டிலேயே தங்கி வணிக ரீதியாக கையொப்பமிட விரும்பினால், இரண்டு நாட்களுக்குப் பிறகு திரும்பி வர குடியேற்ற அதிகாரிகள் எங்களை அனுமதிப்பார்களா அல்லது விமான நிலையத்தில் நிறுத்துவார்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வரும் பயணிகள், இத்தகைய கேள்விகளுக்கு தெளிவு தேவை என்று தெரிவித்துள்ளனர். இதனால் தான் பல வணிக பயணிகள் தங்கள் பயண திட்டத்தை ரத்து செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்தியா வர தயக்கம் தெரிவித்துள்ளனர். ஏனெனில் இவர்கள் ஏழு நாட்களுக்கு ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். இதனால், தற்போது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதையே தவிர்த்துள்ளனர்.

கலதாரி இன்டர்நேஷனல் டிராவல் சர்வீசஸ், MICE மற்றும் ஹாலிடேஸ் மேலாளர் மீர் வாசிம் ராஜா கூறுகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கான விதிகளில் தெளிவு இல்லாததால் இந்த இக்கட்டான சூழ்நிலை நிலவுவதாக கூறியுள்ளார்.

இரண்டு, மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு இந்தியாவிற்கு சுற்றுலா செல்ல விரும்பும் நபர்களிடமிருந்து எங்களுக்கு ஏராளமான அழைப்புகள் வந்துள்ளன. ஆனால் அவர்கள் நீண்ட காலத்திற்கு அங்கேயே சிக்கிக் கொள்ளக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.

விமான கட்டணம் சரிவு

இந்தியாவிற்கு பயணம் செய்பவர்கள், புதிய விதிமுறைகளால் ஏழு நாட்கள் அங்கேயே சிக்கிக்கொள்ளும் அபாயத்தை எடுக்க யாரும் விரும்பவில்லை. இதனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவுக்கான விமானக் கட்டணம் 250 திர்ஹம்ஸாக வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் அட்னானி கூறியுள்ளார்.

“விமானங்கள் இயக்குவது மீண்டும் நிறுத்தப்படுமோ என்ற அச்சம் மக்களுக்கு உள்ளது. இது மக்களைத் தங்கள் பயணங்களை தள்ளிவைக்க முடிவெடுக்க வைக்கிறது,” என்று அவர் கூறினார். “ஜனவரி 19 அன்று ஷார்ஜாவிலிருந்து டெல்லிக்கு ஒரு வழி விமானக் கட்டணம் 250 திர்ஹம் ஆகும். மாறாக, இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு செல்ல மக்கள் விரும்புவதால் இங்கு வருவதற்குரிய கட்டணம் இன்னும் அதிகமாகவே உள்ளது.

” மேலும், அதிகாரிகள் இந்த பிரச்சினையை பரிசீலிக்க வேண்டும். ஏனெனில் இது இந்தியாவின் பயணத் துறையை குறிப்பாக வணிக பயணிகளை பெரிய அளவில் பாதிக்கிறது.குறிப்பாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நிறைய பேர் இரண்டு முதல் நான்கு நாள் பயணத்திற்காக இந்தியாவுக்குச் செல்கிறார்கள்,” என்று அட்னானி கூறினார்.

இந்தியாவில் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட கோவிட்-19 PCR சோதனை அறிக்கை கிடைக்கும் வரை அனைத்து சர்வதேச பயணிகளையும் தனிமைப்படுத்த இந்திய அரசாங்கம் கோரினால், அது ஒருவகையில் மிகவும் ஏற்றதாக இருக்கும் என்றும் அட்னானி விருப்பம் தெரிவித்துள்ளார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap