அமீரக வாசிகளுக்கு ஓர் நற்செய்தி, அபுதாபியில் புதிய கடற்கரை திறக்கப்பட்டுள்ளது..!!

New beach opens at Abu Dhabi corniche

அபுதாபி கார்னிச்சில் (Abu Dhabi corniche) ஒரு புதிய கடற்கரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. இதில் நீச்சல் பகுதி, கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து மற்றும் குழந்தைகள் விளையாட்டுப் பகுதிக்கான வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ளது.

நேஷன் டவர்ஸுக்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்திற்கு எதிரே இந்த புதிய கடற்கரை அமைந்துள்ளது. சுற்றுலாத் திறனை மேம்படுத்துவதற்கான அபுதாபி கார்னிச் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கடற்கரை திறக்கப்பட்டுள்ளது. மேலும், பார்வையாளர்களுக்கும், குடியிருப்பாளர்களுக்கும் மிக உயர்ந்த தரமான பொழுதுபோக்குகளை வழங்க அபுதாபியின் உலகளாவிய கடற்கரை தொடர் சங்கிலியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. .

முனிசிபாலிடி கூறுகையில், கடற்கரையில் கூடைப்பந்து, கைப்பந்து மற்றும் கால்பந்து, கடல் சார்ந்த விளையாட்டு மற்றும் பிற வெளிப்புற விளையாட்டு, குழந்தைகள் விளையாடும் பகுதி மற்றும் உடற்பயிற்சி செய்ய விரும்புவோருக்கான நடைபாதைகள் போன்ற வசதிகள் அனைத்தும் இந்த கடற்கரையில் உள்ளன.

கார்னிச் கடற்கரைகளில் நீச்சல் நேரம் காலை 6 மணி முதல் சூரிய அஸ்தமனம் வரை உண்டு என முனிசிபாலிடி தெரிவித்துள்ளது.

Loading...