UAE Tamil Web

ஷார்ஜா: ஷாப்பிங் மால்களில் 80% மக்களை அனுமதிக்கலாம் – வெளிவந்த புதிய தளர்வுகள்..!

SHOPPING

ஷார்ஜாவில் உள்ள தொழில் மற்றும் வர்த்தக ஸ்தாபனங்களுக்கான புதுப்பிக்கப்பட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை ஷார்ஜா அவரசநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,

ஷார்ஜா பொருளாதார முன்னேற்றத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரன்ட் மற்றும் கபேக்களில் 80 சதவீதம் வரையிலும் மக்களை அனுமதிக்கலாம். அதே நேரத்தில் மற்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும்.

ஷார்ஜா பொருளாதார முன்னேற்றத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட திருமண மையங்களில் 60% வரையிலும் மக்களை அனுமதிக்கலாம். ஆனால் மொத்த விருந்தினரின் எண்ணிக்கை 300 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இதில் பங்கேற்போர் அனைவரும் தடுப்பூசி எடுத்திருக்கவேண்டும் அல்லது தடுப்பூசி ஆய்வில் தன்னார்வலராக இருத்தல் வேண்டும்.

விருந்தினர் தங்களது கிரீன் ஸ்டேட்டசை Alhosn அப்ளிகேஷன் வழியாக காண்பிக்கவேண்டும். அதேபோல விருந்தினர் 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR பரிசோதனை சான்றிதழை வைத்திருக்கவேண்டும்.

சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற மற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என கமிட்டி தெரிவித்துள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் சரியான முறையில் கடைபிடிக்கின்றனரா என்பதை கண்காணிக்க ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHOPPING
0 Shares
Share via
Copy link