UAE Tamil Web

வெளிநாடுகளில் இருந்து ஷார்ஜா வருவோர் கவனத்திற்கு : கொரோனா பரிசோதனை குறித்த நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது..!

Airport (2)

ஷார்ஜா அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழு (ECDMT) பெருகிவரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக புதிய கட்டுப்பாடு ஒன்றினை அறிவித்துள்ளது. அதன்படி, வெளிநாடுகளில் இருந்து ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்திற்கு வருவோர், தங்களது புறப்பாட்டிற்கு முன்னர் 72 மணி நேரங்களுக்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழை வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக இது 96 மணிநேரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், பயணிகள் தங்களது வருகையின்போது விமான நிலையத்தில் ஒரு பரிசோதனைக்கு உட்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ECDMT ன் இந்த அறிவிப்பு நேற்று வெளிவந்தது. அதன்படி, அறிவிப்பு வெளிவந்த நாளில் இருந்து 5 வது நாள் இந்நடைமுறை அமலுக்குவரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் தாங்கள் செல்லும் நாடு விதித்திருக்கும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் எனவும், மருத்துவக் காப்பீடு எடுத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Airport (2)
0 Shares
Share via
Copy link