UAE Tamil Web

இந்த இடங்களில் மட்டும் மாஸ்க்கை கழட்டலாம் – அமீரக அரசு அறிவிப்பு..!

mask

கொரோனா கொடும்பிடியிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள முகக்கவசங்கள் பெரிதும் உதவி புரிகின்றன. பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிதல் வேண்டும் எனவும் மீறுவோருக்கு 3000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் எனவும் அமீரக அரசு தொடர்ந்து எச்சரித்துவருகிறது.

தனியாளாக கார் ஓட்டுவோர், குடும்ப உறுப்பினர்கள்; இரண்டாம் நிலை உறவினர்களுடன் காரில் பயணிப்போர் போன்ற சில விலக்குப் பெற்ற நபர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார்கெட், கடற்கரை ஆகிய பொது இடங்களுக்குச் செல்கையில் மெடிக்கல் அல்லது துணி மாஸ்க்கை அணிந்திருத்தல் கட்டாயமாகும்.

இருப்பினும் சிலருக்கு மாஸ்க் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் குறித்து கீழே காண்போம்.

  • உணவகங்கள், கபேக்கள் போன்ற இடங்களில் உணவு அருந்தும்போது
  • நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் (உரிய மருத்துவ ஆவணங்களை வைத்திருத்தல் வேண்டும்)
  • தனியாக விளையாடுபவர்கள்
  • அலுவலகத்தில் தனியாக பணிபுரிகையில்
  • மருத்துவ பரிசோதனையின்போது
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட மாற்றித் திறனாளிகள்

ஆகியோர் முகக்கவசம் அணிவதிலிருந்து விலக்குப் பெற்றிருக்கிறார்கள். பிறர் கண்டிப்பாக முகக்கவசம் அணிதல் வேண்டும். சமூக பாதுகாப்பை உறுதி செய்ய இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒழுங்கான முறையில் பின்பற்றுவது நம் கடமையாகும்.

mask
3 Shares
Share via
Copy link