UAE Tamil Web

புதியவகை கொரோனா வைரஸ் : மஸ்கட், குவைத் நாடுகளுக்கான விமான சேவைகளுக்கு தடைவிதித்த எதிஹாட்..!

Etihad_Air_

புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் பரவத் துவங்கியதை அடுத்து உலக நாடுகள் மீண்டும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை சவூதி அரேபியா தனது எல்லைகளை மூடுவதாக அறிவித்தது.

- Advertisment -

இதனையடுத்து அமீரக விமான நிறுவனங்களான எதிஹாட் மற்றும் எமிரேட்ஸ் ஆகியவை அமீரகம் – சவூதி இடையே விமானங்கள் மறு அறிவிப்பு வரும்வரையில் இயக்கப்படாது என அறிவித்திருக்கின்றன.

இதைத்தொடர்ந்து அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கும் எதிஹாட் ஏர்வேஸ் அபுதாபி – மஸ்கட், குவைத் இடையேயான விமான சேவைகளை மறுஅறிவிப்பு வரும் வரையில் தடை செய்வதாக அறிவித்துள்ளது.

ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான பயண அனுபவத்தை வழங்க எதிஹாட் ஏர்வேஸ் மேற்கொண்டுள்ள கடுமையான நடவடிக்கைகள் குறித்த கூடுதல் தகவல்கள் www.etihad.com/wellness  என்ற இணையதளத்தில் கிடைக்கின்றன.