அமீரக வாசிகளை குறிவைக்கும் புதிய ஆன்லைன் சவால்…!

New dangerous online challenge surfaces in UAE

ஒரு புதிய ஆபத்தான சவால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் குழந்தைகள் மத்தியில் பரவி வருவதாகவும், மேலும் அது அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவருவதாகவும் அமீரக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சவால் எந்த வயதினரும் எப்போதும் முயற்சிக்கக் கூடாத ஒன்று என்றும் கூறியுள்ளனர். இந்த சவாலில் பங்கேற்பவர் ஒரு கயிறு அல்லது அதைப் போன்ற ஒன்றை பயன்படுத்தி தன் கழுத்தை நெரிக்க வேண்டும், மேலும் மூச்சு விடாமல் யார் நீண்ட காலம் இருக்க முடியும் என்பதைப் போன்ற ஆபத்தான விளைவுகளை கொண்டது என்று அரபு நாளேடான Al Bayan தெரிவித்துள்ளது.

தனது நண்பர்களுடன் சவாலில் பங்கேற்ற ரஷீத் என்ற மாணவரின் வழக்கை செய்தித்தாள் எடுத்துக்காட்டுகிறது. அதில் அவரது தாயார் கழுத்தில் காயங்கள் இருப்பதையும், அவனுடைய குரல் மாறி இருப்பதையும் தாயார் கண்டுபிடித்துள்ளார்.

இதனை அடுத்து, ரஷீத் இந்த சவாலில் பங்கேற்றது கண்டுபிடிக்கப்பட்டது. நண்பர்களுடன் எதோ விளையாடிக்கொண்டு இருக்கிறான், இதில் எந்தத் தீங்கும் இல்லை, என்று தாயார் எண்ணியதாக குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்று ரசீத்தின் தாயார் வலியுறுத்தி கூறியுள்ளார்.

 

Loading...