UAE Tamil Web

துபாய் மெட்ரோவின் மிகப்பெரிய ரயில் நிலையம் ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட் நாளை திறப்பு!

ஜூமைரா கோல்ஃப் எஸ்டேட் மெட்ரோ ரயில் நிலையம் நாளை முதல் (செப்டம்பர் 1) பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட உள்ளதாக துபாய் சாலை மற்றும் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. உலகின் பிரமாண்ட கண்காட்சிகளில் ஒன்றான Expo 2020 தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் இந்த மெட்ரோ ரயில் நிலையம் திறக்கப்படுகிறது. 28,700 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த ரயில் நிலையம் 232 மீட்டர் உயரம் கொண்டது. துபாயில் உள்ள சுரங்க ரயில் நிலையங்களிலேயே ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட் மிகப்பெரியது எனும் பெருமையை பெற்றுள்ளது.

பரபரப்பான நேரங்களில் 11,500 பயணிகளையும் நாள் ஒன்றுக்கு 2.50 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது. ரயில் நிலையத்தில் 2 நடைமேடைகளும் வெளியில் 4 பேருந்து நிறுத்தம், 20 டாக்சி ஸ்டாண்ட் , 400 இலவச வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையம் வெளியே 14 கடைகள் அமைக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஜூமைரா கோல்ஃப் எஸ்டேட்டில் நாளை முதல் செயல்பாட்டிற்கு வர உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தால் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

2 Shares
Share via
Copy link