UAE Tamil Web

உலகின் அதிவேக சார்ஜிங் பேட்டரி மூலம் இயங்கும் மின்சார பேருந்துகள் அபுதாபியில் அறிமுகம்..

bus

அபுதாபியில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் மின்சாரத்தால் இயங்கும் புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மின்சார பேருந்துகள், உலகின் அதிவேகமாக சார்ஜ் ஆகும் லித்தியம் டைட்டனேட் ஆக்சைடு (LTO) பேட்டரி மூலம் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

எமிரேட்ஸ் குளோபல் மோட்டார் எலக்ட்ரிக், அல் ஃபஹிம் குழுமம் மற்றும் யின்லாங் எனர்ஜி ஆகியவை எல்.டி.ஓ மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளன. LTO பேட்டரி 20 நிமிடங்களுக்குள் சார்ஜ் செய்யப்படலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்சார பேருந்துகள் அமீரகத்தின் காற்று மாசை குறைக்க உதவும். மேலும் ஒரு மின்சார பேருந்தானது  ஆண்டுக்கு 27 பயணிகளால் இயக்கப்படும் கார்களால் ஏற்படும் மாசையும், 12,000 கேலன் டீசல் எரிபொருளுக்கும் சமமான மாசையும் குறைக்கிறது.

இது பற்றி பேசிய அல் ஃபஹிம் குழுமத்தின் குழுத் தலைவரான முகமது அப்துல்லா அப்துல் ஜலீல் அல் ஃபஹிம், எப்போதுமே அபுதாபி அதிநவீன, சுற்றுச்சூழல் நட்பு தொழில்நுட்பங்களை அதன் உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளில் இணைப்பதில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. அமீரகத்தின் பசுமையை பாதுகாப்பதில் ஒரு முன்னோடி பங்கை வகிப்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்றார்.

விரைவில் இன்னும் கூடுதலான மின்சார பேருந்துகள் தலைநகரைச் சுற்றி வருவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம் என்றும் குறிப்பிட்டார்.