UAE Tamil Web

அபுதாபி பள்ளிக்கூடங்களுக்கு கூடுதல் தளர்வு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

கோடை விடுமுறைக்குப் பின்னர் ஆகஸ்ட் மாத இறுதியில் அபுதாபியில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருசில தளர்வுகளை அபுதாபி கல்வியறிவுத்துறை (ADEK – Abu Dhabi Department of Education and Knowledge) வெளியிட்டுள்ளது.

Department of Education and Knowledge

கூடுதல் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள்

1. பள்ளியில் உள்ள கேண்டீன்கள் செயல்படலாம். சமையலுக்கு அனுமதி

2. ஏற்கனவே நடைமுறையில் இருந்த Bubble முறை மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளில் தொடர வேண்டும்

3. ஒவ்வொரு Bubble க்கும் 10 மாணவர்கள் இருந்த நிலையில் தற்போது 16ஆக அதிகரிப்பு

4. 16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம்

5. பள்ளிக்கூடங்களில் Extra Curricular Activities மாணவர்களுக்கு நடத்திக் கொள்ள அனுமதி. வாடகைக்கு வெளியில் இருந்து பெறப்படும் விளையாட்டு உபகரணங்களுக்கு தடை

6. மாணவர்கள் தனி மனித இடைவெளி, முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்

7. 16 வயதை பூர்த்தியடையும் மாணவர்கள் தங்கள் பிறந்த தினத்தில் (16 வயதை எட்டிய நாள்) இருந்து 4 வாரங்களுக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

8. உடல்நலம் கருதி ஆன்லைனில் கல்வி பயில விரும்பும் மாணவர்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ளதாவர்கள் தொடர்ந்து ஆன்லைன் வாயிலாக கல்வி பயிலலாம்

9. தடுப்பூசி செலுத்தாத மாணவர்களை முக்கிய தேர்வு எழுத பள்ளிகளில் அனுமதி வழங்க வேண்டும். புதிதாக அமீரகத்திற்கு வந்த மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த உதவ வேண்டும்

2 Shares
Share via
Copy link
Powered by Social Snap