UAE Tamil Web

துபாய் ஆட்சியாளரை சந்தித்து ஆவணங்களை வழங்கிய அமீரகத்திற்கான புதிய இந்தியத் தூதர்..!

sanjay

அமீரகத்திற்கான இந்தியாவின் தூதராக செயல்பட்டுவந்த திரு.பவன் கபூர் ரஷியாவிற்கான இந்தியத் தூதராக செயல்படுவார் என இந்திய அரசு அறிவித்திருந்த நிலையில் திரு. சஞ்சய் சுதிர் அமீரகத்திற்கான புதிய இந்தியத் தூதராக பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில் இதற்கான ஆவணங்களை அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களை சந்தித்து இன்று வழங்கினார் சஞ்சய் சுதிர்.

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சஞ்சய்,” அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களை சந்தித்து ஆவணங்களை வழங்கினேன். அமீரகத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதில் பெருமைகொள்கிறேன். இருநாட்டு உறவுகள் மேலும் வலுப்பட அயராது உழைப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap