34.3 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

அமீரக சுற்றுலாத்தல வரிசையில் புதிய மைல்கல் – ஈத் அல் பித்ர் பண்டிகையின் முதல் நாளில் திறந்துவைக்கப்பட்டது!

sharja

ஈத் அல் பித்ர் பண்டிகையின் முதல் நாளில் கோர் ஃபக்கான் -ல்  (Khor Fakkan) புதிய நினைவுச் சின்னம்  ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

உச்ச சபையின் உறுப்பினரும், சார்ஜாவின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி  (Sheikh Sultan bin Muhammad Al Qasimi) அவர்களின் தலைமையில், ஷார்ஜாவின் நகர திட்டமிடல் மற்றும் கணக்கெடுப்புத் துறையின் ஆலோசகரும், பொறியாளருமான சாலாஹ் பின் புட்டி அல் முஹைரி (Salah Bin Butti Al Muhairi) இந்த நினைவுச் சின்னத்தை திறந்துவைத்தார். அரேபிய தூப எரிகலன் (Arabian Incense Burner) போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த நினைவுச்சின்னம் மப்காரா- வின் (Mabkhara) குறியீடாக கருதப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை அன்று திறக்கப்பட்ட இந்த நினைவுச் சின்னமானது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நகருக்கு உலகமெங்கிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வாயிலாக திகழ இருக்கிறது.

sharjah tourism
Image Credit : wam

இதுகுறித்து முஹைரி பேசுகையில்,” ஷார்ஜாவின் ஆட்சியாளரினால் இத்திட்டம் நிறைவேறியிருக்கிறது. அவருடைய வலியுறுத்தலின் அடிப்படையில் கட்டப்பட்ட இந்த நினைவுச் சின்னம் புராதான பாரம்பரியம் கொண்ட நகரத்தில் புது ஒளி பாய்ச்சியது போலிருக்கிறது. ஷார்ஜாவில் கோர்ஃபக்கான் வரலாற்று, பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாகும்” என்றார்.

கிழக்கு மற்றும் மத்திய நாடுகளில் உள்ள கலை நுட்பங்களை ஆய்வு செய்து அதனடிப்படையிலேயே இத்திட்டம் முழுமையடைந்திருக்கிறது எனவும், பல்வேறு சுற்றுலா மற்றும் பாரம்பரிய சின்னங்களின் சிறப்பம்சங்களை இந்த நினைவுச் சின்னத்தில் புகுத்தியுள்ளதாகவும் முஹைரி தெரிவித்தார்.

இதையும் படிங்க.!