UAE Tamil Web

துபாய் : தொழிலாளர்களுக்காக புதிய PCR பரிசோதனை மையம் திறப்பு..!

PCR-tent-

துபாய்: அல் கூஸ் -ன் ஹவுசிங் 1,2,3 மற்றும் 4 ஆகியவற்றில் வசித்துவரும் தொழிலாளர்களுக்கு புதிய PCR மையத்தினை திறந்துள்ளது ரைட் ஹெல்த்கேர் குரூப் (Right Health Group).

இந்த டெண்டை மக்கள் சேவகரும் ஏமிராட்டியுமான டாக்டர். பு அப்துல்லா கடந்த ஆகஸ்டு 18 ஆம் தேதி திறந்துவைத்தார். இம்மையத்தில் பரிசோதனை எடுக்கும் தனிநபர்களுக்கு 100 திர்ஹம்ஸ் கட்டணத்திலும் மொத்தமாக புக் செய்பவர்களுக்கு 80 திர்ஹம்ஸ் கட்டணத்திலும் PCR பரிசோதனை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய ரைட் ஹெல்த்கேர் குரூப்பின் தலைவர் சஞ்சய் பதான்கர்,” தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பரிசோதனை மையத்தை திறக்க விரும்பினோம். அல் கூஸ் பகுதியில் திறக்கப்பட்ட முதல் தனியான பரிசோதனை மையம் இதுதான். ஒரு நாளைக்கு 500 நாசல் ஸ்வாப் பரிசோதனை இங்கு எடுக்கப்படும். தினந்தோறும் காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரையில் இம்மையம் திறந்திருக்கும்” என்றார்.

துபாயில் மொத்தம் 63 இடங்களில் குறைந்த கட்டணத்தில் பரிசோதனை எடுக்கும் மையங்களை இந்தக் குழுமம் நிர்வகித்து வருகிறது. விரைவில் ஜெபல் அலி பகுதியில் சோனாப்பூர் தொழிலாளர் தங்குமிடத்தில் இருப்பவர்களுக்காக புதிய பரிசோதனை மையம் ஒன்றினைத் துவங்க இருப்பதாக பதான்கர் தெரிவித்தார்.

இந்த மையங்களில் பரிசோதனை எடுக்க முன்பதிவு தேவையில்லை எனவும் பரிசோதனை முடிவுகள் 12 – 24 மணிநேரத்திற்குள் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார். 6 மணிநேரத்தில் முடிவுகளைப் பெறும் சிறப்பு வசதியும் இங்குள்ளது குறிப்பிடத்தக்கது.

PCR-tent-
1 Share
Share via
Copy link