UAE Tamil Web

A-Z வரை அமீரகம் முழுமைக்கும் விதிக்கப்பட்டுள்ள புதிய குவாரண்டைன் விதிமுறைகள்!

home-isolation--home-quarantine

துபாய், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட அமீரகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தும் விதிகள்:

நீங்கள் கொரோனா பரிசோதனை செய்த போது முடிவு பாசிட்டிவ் என வந்தால்,, வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள முடியுமா அல்லது ஒரு நிறுவன வசதிக்குச் செல்ல வேண்டுமா என்று நீங்கள் யோசிக்கலாம். எமிரேட்ஸ் ஹெல்த் சர்வீசஸ் (EHS) தங்கள் சமூக ஊடக சேனல்களில் வீட்டில் தனிமைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அதற்கு யார் தகுதியானவர்கள் குறித்து வெளியிட்டுள்ளனர்.

ஷார்ஜா, அஜ்மான், ராசல் கைமா, உம் அல் குவைன் அல்லது புஜைராவில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் இந்த ஷார்ஜா, அஜ்மான், ராசல் கைமா, உம் அல் குவைன் அல்லது புஜைராவில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும். மேலும், மேல் குறிப்பிட்டுள்ள ஏதோ ஒரு இடத்தில் நீங்கள் வசிக்கிறீர்கள் என்றால், கொரோனா தொடர்பான ஏதேனும் விசாரணைகள் இருந்தாலோ அல்லது ஏதேனும் உதவி தேவைப்பட்டாலோ, உதவிக்கு EHS யை அணுகலாம்.

வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதற்கு யார் தகுதியானவர்?

EHS இன் படி, வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதற்கு தகுதியான படிகள் பின்வருமாறு:

  • ஒரு தனிப்பட்ட குளியலறையுடன் ஒரு தனி அறை இருக்க வேண்டும்.
  • நீங்கள் ஆக்டிவாக உள்ள ஃபோன் எண்ணை வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் அதிகாரிகள் மற்றும் உங்கள் குடும்பத்தினரால் உங்களைத் தொடர்புகொள்ள முடியும். மேலும் உள்ளூர் சுகாதார அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும் உதவும்.
  • உங்களுக்கு கொரோனா அறிகுறிகள் நிலையாக இருந்தால், வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதற்குத் தகுதி பெறுவீர்கள்.
  • தெர்மோமீட்டர் மற்றும் ஆக்சிமீட்டர் (இரத்தத்தில் ஆக்ஸிஜன் செறிவூட்டலை அளவிடுவதற்கான கருவி) அடங்கிய முதலுதவி பெட்டி உங்களிடம் இருக்க வேண்டும்.
  • முககவசம் மற்றும் கையுறைகள் அணிதல் மற்றும் சமூக விலகல் போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
  • ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, உம் அல் குவைன் அல்லது ஃபுஜைராவில் வசிப்பவர்கள், 8008877 என்ற எண்ணில் கொரோனா தொடர்பான விசாரணைகளுக்கு EHSஐத் தொடர்பு கொள்ளலாம்.

துபாயில் சமீபத்திய தனிமைப்படுத்தல் விதிகள் :

  • அறிகுறியற்ற அல்லது லேசான அறிகுறிகளைக் கொண்ட கொரோனா நோயாளிகள், வீட்டில் தனிமைப்படுத்தப்படுத்திக் கொள்ள முடியும்.
  • உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருந்தால், பின்பற்ற வேண்டிய விதிகள் என்ன?

துபாயில் கொரோனா தனிமைப்படுத்தல் விதிகள் பற்றிய விரிவான தகவலுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

அபுதாபியில் சமீபத்திய தனிமைப்படுத்தல் விதிகள்:

PCR சோதனை முடிவு பாசிட்டிவ் ஆக இருந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?

கொரோனா சோதனையில், பாசிட்டிவ் முடிவை பெற்றவர்கள் அல்லது வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகளை அபுதாபி அரசு புதுப்பித்துள்ளது. தற்போதைய குவாரண்டைன் விதிகள் என்ன என்பதை அபுதாபி பொது சுகாதார மையம்(ADPHC), அதன் அங்கீகரிக்கப்பட்ட சமூக ஊடகங்களில் ஒவ்வொன்றாக வெளியிட்டுள்ளது.

கொரோனா சோதனையில் பாசிட்டிவ் முடிவை பெற்றவர்களுக்கான விதிமுறைகள் :

  1. அதிக ஆபத்துள்ள பிரிவுகள்

புதிய நடைமுறைகளின் கீழ், 50 வயதை கடந்தவர்கள், தீவிர அறிகுறிகளை கொண்டவர்கள், மார்பக நோய் உள்ளவர்கள் அல்லது கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:

  • மருத்துவ மதிப்பீடு மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு நியமிக்கப்பட்ட கொரோனா முதன்மை மதிப்பீட்டு மையத்துக்கு செல்ல வேண்டும்.
  • தனிமைப்படுத்தலை முடிவுக்குக் கொண்டுவர, நீங்கள் கண்டிப்பாக, 24 மணிநேர இடைவெளியில் இரண்டு நெகட்டிவ் முடிவுகளைப் பெற வேண்டும் அல்லது 8 ஆம் நாள் மற்றும் 10 ஆம் நாள் PCR பரிசோதனையை நடத்தி, மருத்துவ மதிப்பீட்டிற்குப் பிறகு, தனிமைப்படுத்தப்பட்ட கடைசி மூன்று நாட்களில் எந்த அறிகுறிகளும் இல்லாமல் 10 நாட்கள் தனிமையில் இருக்கவும்.
  1. மற்ற பிரிவுகள்

  • லேசான அல்லது நடுத்தர அறிகுறிகள் மற்றும் நாள்பட்ட நோய் இல்லாதவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  • தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அமீரகத்தில் உள்ள ஏதாவது ஒரு சுகாதார நிலையத்தில் மீண்டும்  பரிசோதனை செய்ய வேண்டும்.
  • உங்கள் PCR சோதனை முடிவு நெகட்டிவ் ஆக இருந்தால், 24 மணிநேரம் காத்திருந்து மறுபரிசோதனை செய்யுங்கள். உங்களின் இரண்டாவது PCR சோதனை முடிவும் நெகட்டிவ் ஆக இருந்தால், ADPHC மக்களை இயல்பான செயல்பாடுகளைத் தொடரவும். அதே போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடரவும் அறிவுறுத்தப்படுகிறது.
  • உங்கள் PCR சோதனை முடிவு பாசிட்டிவ் ஆக இருந்தால், சுகாதாரத்துறை நிபுணரால் தொடர்பு கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தும் நடைமுறைகள் தெரிவிக்கப்படும்.

கொரோனா பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கான விதிமுறைகள்

  • கொரோனா பரிசோதனையில், பாசிட்டிவ் முடிவை பெற்றவர்கள் போல அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என அடையாளம் காணப்படுபவர்களுக்கான நெறிமுறைகளையும் அதிகாரிகள் புதுப்பித்துள்ளனர்.
  • நெருங்கியத் தொடர்பில் இருந்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் இருந்து PCR பரிசோதனை செய்துக்கொள்ளுமாறு மெசேஜ் அனுப்பப்படும். மேலும் அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் வீட்டில் தனிமைப்படுத்தல் திட்டத்தில், தகவல்களை பதிவுச் செய்ய அறிவுறுத்தும்.
  • முழுமையான தடுப்பூசி போட்டவர்கள் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • அறிவுறுத்தப்பட்ட PCR சோதனையில் பாசிட்டிவ் முடிவை பெற்றவர்கள், வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அதே நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
  • நெகட்டிவ் சோதனை முடிவை பெற்றவர்கள் கூடுதல் PCR சோதனையை மேற்கொள்ள வேண்டும். அதாவது தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு ஆறாவது நாள் மற்றும் தடுப்பூசி போடாதவர்களுக்கு ஒன்பதாவது நாள் என இரண்டாவது PCR பரிசோதனையை செய்ய வேண்டும்.
  • இரண்டாவது சோதனை முடிவு நெகட்டிவ் ஆக இருந்தால், அவர்கள் கொரோனா பாதுகாப்பு விதிகளுக்கு இணங்க தங்களின் தனிமைப்படுத்தல் காலத்தை முடித்து கொள்ளலாம்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap