25.3 C
Dubai
October 23, 2020
UAE Tamil Web

துபாய் எக்ஸ்போ 2020 தளத்திற்கு செல்லும் புதிய சாலை திறப்பு.!

எக்ஸ்போ 2020 திட்டத்திற்கு செல்லும் 6ஆம் கட்ட சாலை இன்று ஞாயிற்றுக்கிழமை (22.12.2019) திறக்கப்படும் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.

இந்த திட்டம் – எமிரேட்ஸ் மற்றும் எக்ஸ்போ சாலைகளின் மேம்பட்ட சந்திப்பை உள்ளடக்கியது என்று கூறப்பட்டுள்ளது.

துபாயில் எக்ஸ்போ 2020ஐ நடத்துவதற்கான தேவைகளை பூர்த்தி செய்ய RTA தற்போது மேற்கொண்டுள்ள மிகப்பெரிய திட்டமாக இது இருப்பதாக RTA இயக்குனர் மட்டார் அல் டேயர் விவரித்துள்ளார்.

மொத்தம் சுமார் 3 பில்லியன் திர்ஹம் செலவாகும் இந்த பிரமாண்ட திட்டம் ஆறு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த திட்டத்தின் நோக்கம், “எக்ஸ்போ பார்வையாளர்களுக்கு போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்வதும், இப்பகுதியில் எதிர்கால திட்டங்களுக்கு சேவை செய்வதும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



error: Alert: Content is protected !!