5 வகையான வீட்டுப் பணியாளர்களுக்கான புதிய சம்பளம் வழங்கும் விதி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
வீட்டு பணி செய்பவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள முதலாளிகள், தங்கள் வீட்டுப் பணியாளர்களை நாட்டின் ஊதிய பாதுகாப்பு அமைப்பில் (WPS) பதிவு செய்வது கட்டாயமாகும்.
மேலும் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு பிறகு வீட்டு பணியாளர்கள் தவிர வேறு சில வகை தொழில்களும் இந்த அமைப்பின் கீழ் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
WPS என்பது ஒரு மின்னணு சம்பள பரிமாற்ற அமைப்பாகும், இது வங்கிகள், நாணய பரிமாற்றம் மற்றும் சேவையை வழங்க அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் மூலம் ஊதியங்களை செலுத்த நிறுவனங்களை அனுமதிக்கிறது.
இந்த அமைப்பின் மூலம் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்கப்படுகின்றதா என்பதை அரபு அதிகாரிகள் ஊர்ஜிதப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில், மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (மோஹ்ரே) WPS இல் தங்கள் வீட்டுப் பணியாளர்களை பதிவு செய்ய முதலாளிகளுக்கு வலியுறுத்தியுள்ளது.
ஒன்றாம் தேதி முதல் வீட்டுப் பணியாளர் பிரிவின்கீழ் கீழ்க்கண்ட 5 தொழில்கள் அமைப்பில் சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது:
- தனியார் வேளாண் பொறியாளர்
- மக்கள் தொடர்பு அலுவலர் (PRO)
- வீட்டு வேலை செய்பவர்
- பர்சனல் டியூட்டர்
- பெர்சனல் ட்ரெயினர்
புகார் நிலுவையில் உள்ள வீட்டுப் பணியாளர்கள் – அல்லது வேலையில்லாதவர்கள், அல்லது வேலைக்கு வராதது குறித்த பதிவு செய்யப்பட்ட அறிவிப்பைக் கொண்டவர்கள் – இந்த WPS விதியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
வேலைவாய்ப்பு ஒப்பந்தம் தொடங்கி இன்னும் 30 நாள் முடிவு பெறாதவர்கள் இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் வர மாட்டார்கள்.
வீட்டுப் பணியாளர் வகையின் கீழ் வரும் 19 தொழில்கள்:
வீட்டுப் பணிப்பெண், மாலுமி/படகு ஓட்டுநர், பாதுகாப்புக் காவலர், வீட்டு காவலர், வீட்டுக் குதிரை மேய்ப்பவர், வீட்டு பருந்து பயிற்சியாளர், உடல் உழைப்புத் தொழிலாளி, வீட்டுப் பணியாளர், சமையல்காரர், ஆயா/குழந்தை பராமரிப்பாளர், விவசாயி, தோட்டக்காரர், தனிப்பட்ட ஓட்டுநர் , தனியார் விவசாய பொறியாளர், மக்கள் தொடர்பு அலுவலர் (PRO), தனிப்பட்ட செவிலியர், தனிப்பட்ட ஆசிரியர் மற்றும் தனிப்பட்ட பயிற்சியாளர்.
இந்த விதியின் மூலம் தொழிலாளர்கள் தங்களுக்குரிய சம்பள பணத்தினை உரிய நேரத்தில் பெற வாய்ப்புள்ளதால் தொழிலாளர்களுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.