அபுதாபி காவல்துறை, நிலையற்ற வானிலையின் போது, வாகன ஓட்டிகளுக்கு வேக வரம்புகளை நினைவூட்டும் வகையில், ஒளிரும் மின் பேனல்கள் மற்றும் பலகைகளை எமிரேட் முழுவதும் நிறுவியுள்ளது.
அபுதாபி காவல்துறையின் அறிக்கையின்படி, மழை, பலத்த காற்று, மணல் புயல் மற்றும் கடுமையான மூடுபனி ஆகியவற்றின் போது 80 கிமீ / மணி மேல் வேக வரம்பு மீறி இயக்கப்படும் வாகனத்தை கண்டறிய நவீன திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டுள்ளதாக என்று அபுதாபி காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபாயகரமான காலநிலை நிலைகளின் போது வாகன ஓட்டிகளின் வேக வரம்புகளை கடைபிடிக்குமாறும், வானிலை முன்னறிவிப்புகளை தவறாமல் பின்பற்றுமாறும், பொருத்தமான தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.