34.8 C
Dubai
July 11, 2020
UAE Tamil Web

அமீரகத்தில் இன்று முதல் சர்க்கரை பானங்கள், சிகரெட்டுகளுக்கு புதிய வரி.!

Sweet Drinks

டிசம்பர் 1 2019 – இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியிருப்பாளர்கள் இனிப்பு தின்பண்டங்கள், கார்பனேற்றப்பட்ட பானங்கள் (பெப்சி, கோகோ கோலா, ..) மற்றும் எனர்ஜி ட்ரிங்க்ஸ் உட்பட – சிகரெட் மற்றும் மின்-சிகரெட்டுகள் உள்ளிட்ட பொருள்களுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இனிப்பு பொருட்கள் மீது வரி விதித்திருப்பது சுகாதாரத்துறையில் பெரும் சேமிப்பை ஏற்படுத்தும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இன்று முதல் இனிப்புப் பானங்கள், மின்னணு புகைபிடிக்கும் சாதனங்கள் மற்றும் கருவிகளுக்கு புதிய கூடுதல் கட்டணம் அறிவித்திருப்பதை மருத்துவ வல்லுநர்கள் பாராட்டியுள்ளனர்.

இதுகுறித்து டாக்டர்களின் கருத்துக்கள்:

கராமாவில் உள்ள அஸ்டெர் கிளினிக்கின் (Aster Clinic) சிறப்பு உள் மருத்துவ நிபுணர் (specialist internal medicine) டாக்டர் ஸ்ரீகுமார் ஸ்ரீதரன் கூறுகையில் : “இந்த வரியானது உடல் ஆரோக்கியத்தின் அடிப்படையில் சேமிப்பை மட்டுமே தரும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் இனிப்பு பானங்களுக்கு அவுன்ஸ் ஒன்றிற்கு ஒரு சதவிகிதம் வரி விதிக்கப்படுவதால் 17 பில்லியன் டாலருக்கும் அதிகமான சுகாதார செலவு சேமிப்பு ஏற்படுகிறது என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன” என்கிறார்.

“இந்த வரிகளிலிருந்து திரட்டப்பட்ட வருவாய்கள் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படலாம். ஐக்கிய அரபு அமீரகத்தின் வரிகளால் கிடைக்கும் வருவாயானது சுகாதார அமைப்புகளை மேம்படுத்துதல், ஆரோக்கியமான உணவுகளை ஊக்குவித்தல், உடல் செயல்பாடுகளை அதிகரித்தல் அல்லது பயனுள்ள வரி நிர்வாகத்திற்கான திறனை வளர்த்தல் போன்றிய முயற்சிகளுக்கு செலவிடப்படலாம். ஆகவே இந்த குறிப்பிட்ட வரி அமீரக மக்களுக்கு பெரும் பயனையே தரும். குறைந்த வருமானம் கொண்ட மக்கள் மற்றும் இளைஞர்கள் இந்த வரிகளிலிருந்து அதிக சுகாதார நலன்களைப் பெறுவார்கள்” என்று அவர் கூறுகிறார்.

மெட்கேர் (MedCare) பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் உட்சுரப்பியல் நிபுணர் டாக்டர் அல்ஷிமா முகமது ஹசன் கூறுகையில், மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்களின் கலால் வரி, நிச்சயமாக அவற்றின் பயன்பாற்றை குறைக்கும். பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கு, குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கும் இந்த பொருட்கள் எளிதில் வாங்க முடியாமல் போய்விடும். இந்த தயாரிப்புகளிலிருந்து விலகி இருப்பது உடல் பருமன், நீரிழிவு, டிஸ்லிபிடீமியா மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற இருதய சம்பந்தப்பட்ட நோய்கள் வராமலும் தடுக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுமாறு ஊக்குவிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்கிறார்.

சர்க்கரை பண்டங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்கள்:

” சாதாரணமான உணவுகளை விட கலோரி பானங்களை உட்கொள்வது உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கின்றது. ஏனென்றால் மற்ற உணவுகளிலிருந்து கலோரி உட்கொள்வதைக் குறைப்பதன் மூலம் இப்பானங்களின் கலோரிகள் (Calories) உடலிற்கு முழுமையாக ஈடுசெய்யாது”.

“ஒரு நாளைக்கு ஒரு சர்க்கரை பானம் அல்லது அதற்கு மேற்பட்டவற்றை எடுத்துக் கொள்ளும் பெரியவர்கள், குடிப்பழக்கம் இல்லாதவர்களை விட அதிக எடை அல்லது உடல் பருமனாக இருக்க 27 சதவீதம் வாய்ப்புகள் அதிகம்.”என்று டாக்டர் ஸ்ரீதரன் கூறினார்.

நீரிழிவு, உடல் பருமனைத் தடுக்கும்

“அரசு எதிர்பார்த்தபடி, குறைந்த வருமானம் கொண்ட மக்கள் பணக்காரர்களை விட அதிகமாக இப்பொருள்களின் பயன்பாட்டை குறைக்க வாய்ப்புகள் நிறைய உள்ளன. மேலும், குழந்தைகள் இந்த வரியிலிருந்து பெரிதும் பயனடையலாம்.”

மேலும் இதுபோன்ற பானங்களில் இருந்து சர்க்கரை நீக்கப்பட்டால், பல் சிதைவு, உடல் பருமன் மற்றும் டைப் டூ நீரிழிவு ஆகிய நோக்காய்களின் அளவு குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 18 வயதிற்க்கு உட்பட்டவர்களுக்கு இது பொருந்தும்.

நீரிழிவு நோய்:

சர்க்கரை பானங்களை தவறாமல் உட்கொள்ளும் நபர்கள் – ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு கேன்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு – இதுபோன்ற பானங்களை அரிதாகவே உட்கொள்பவர்களை விட டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான 26 சதவீதம் அதிக ஆபத்து உள்ளது, இளைஞர்களுக்கு ஆபத்துகள் இன்னும் அதிகமாக உள்ளது.

பல் சிதைவு:

சோடா பானங்களை பயன்படுத்துவதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பற்சிதைவு, தொற்று மற்றும் பல் இழப்பு ஆகியவற்றின் வாய்ப்பை அதிகரிக்கிறது.

இதய நோய்:

ஒரு நாளைக்கு ஒரு சர்க்கரை பானம் குடிக்கும் ஆண்களுக்கு சர்க்கரை பானங்களை அரிதாக உட்கொள்ளும் ஆண்களை விட, மாரடைப்பு அல்லது மாரடைப்பால் இறப்பதற்கான 20 சதவீதம் ஆபத்து அதிகமாக உள்ளது.

புகைபிடிப்பதற்கான புதிய வரிகள்:

  • அனைத்து மின்னணு புகைபிடிக்கும் சாதனங்கள் மற்றும் கருவிகள், அவை நிகோடின் அல்லது புகையிலை கொண்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி, அவை சுங்க HS 85437031, 85437032, 85437039 குறியீடுகளின் கீழ் இறக்குமதி செய்யப்படும்.
  • மின்னணு புகைபிடிக்கும் சாதனங்கள் மற்றும் கருவிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து திரவங்களும் நிகோடினை கொண்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி, அவை சுங்க HS 38249999 குறியீட்டின் கீழ் இறக்குமதி செய்யப்படும்.

புதிய விலைகள்:

திர்ஹம்ஸ் 8:

திர்ஹம் 4-க்கு கிடைத்த ஒரு 20 சிகரெட்டுகளை கொண்ட ஒரு பேக் இன்று முதல் இரட்டிப்பாகி திர்ஹம் 8-க்கு விற்பனை செய்யப்படும்.

திர்ஹம்ஸ் 25:

250 கிராம் வாட்டர் பைப் புகையிலை மற்றும் அதை போன்ற தயாரிப்புகளுக்கு குறைந்தபட்ச விலை திர்ஹம்ஸ் 25 ஆகும்.

100%

புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள், மின்னணு புகை சாதனங்கள் மற்றும் திரவங்கள், எனர்ஜி ட்ரிங்க்ஸ் ஆகியவைகளுக்கு 100% கலால் வரி செலுத்த வேண்டும்.

இதையும் படிங்க.!