UAE Tamil Web

திருத்தப்பட்ட அரபு வாகன சட்டம்: இனி 2,000 திர்ஹம் வரை அபராதம்… யாருக்கெல்லாம் பொருந்தும்?

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2,000 திர்ஹம் வரையிலான புதிய போக்குவரத்து அபராதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உள்துறை அமைச்சகம் ட்விட்டரில் இது பற்றி கூறும் பொழுது, “புதிய விதிமுறைகள்” பாதுகாப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

குறிப்பாக மழை மற்றும் நிலையற்ற வானிலை தொடர்பான அவசர காலங்களை கருத்தில் கொண்டு இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

புதிய அபராதங்கள்:

>> மழைக் காலநிலையில் பள்ளத்தாக்குகள், வெள்ளம் சூழ்ந்த பகுதிகள் மற்றும் அணைகளுக்கு அருகில் கூடினால்: 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் ஆறு கருப்பு புள்ளிகள்

>> வெள்ளம் சூழ்ந்த பள்ளத்தாக்குகளுக்குள், அவற்றின் ஆபத்து அளவைப் பொருட்படுத்தாமல் வாகனம் ஓட்டினால் 2,000 அபராதம், 23 கருப்பு புள்ளிகள் மற்றும் 60 நாள் வாகனங்கள் பறிமுதல்.

>> போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தடுப்பது.அவசர காலங்கள், பேரிடர்கள், நெருக்கடிகள் மற்றும் மழையின் போது ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு வாகனங்கள் செலவிடாமல் வழி மறிப்பது போன்ற தவறுகள் செய்தால் Dh1,000 அபராதம், நான்கு கருப்பு புள்ளிகள் மற்றும் 60 நாள் வாகனங்கள் பறிமுதல்

நாட்டில் மழை பெய்யும்போது, ​​இனிமையான வானிலையை அனுபவிக்க மலைப்பகுதிகளுக்குச் செல்வது குடியிருப்பாளர்களிடையே பொதுவானது.

எவ்வாறாயினும், வெள்ள நீர் அந்த காலகட்டங்களில் விரைவாக மேலான பகுதியில் இருந்து தாழ்வான பகுதிகளை விரைவாக அடைந்து சதுப்பு நிலங்களை ஏற்படுத்த கூடும் என்பதால் கடந்த வருடங்களில் இது குறித்து பல எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன.

ஆனால் மக்கள் அதையும் பொறுப்படுத்தாமல் அந்த பகுதிகளில் உலா வந்த வண்ணம் இருந்தனர்.பொதுவாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அதிகாரிகள் நிலையற்ற வானிலையின் போது குடியிருப்பாளர்கள் பள்ளத்தாக்குகள் மற்றும் அணைகளிலிருந்து விலகி இருக்க எச்சரிக்கைகளை வெளியிடுகிறார்கள்.

கனமழையின் பொழுது மலைகளில் தண்ணீர் கொட்டுவதால் பள்ளத்தாக்குகளில் பொதுவாக வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. வாகன ஓட்டிகள் மழையின் போது பள்ளத்தாக்குகளைக் கடப்பதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.

ஏனெனில் வாகனங்கள் அரித்து செல்லக்கூடிய அபாயம் உள்ளது. இந்த புதிய சட்டங்கள் மற்றும் அபராதங்கள் மூலம், மழைக் காலநிலையில் வெள்ளம் ஏற்படும் பகுதிகளுக்கு குடியிருப்போர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்வது இப்போது சட்டவிரோதமானது.

கனமழையின் போது மக்கள் சிக்கித் தவிக்கும் சம்பவங்கள் ஏராளம். கடந்த ஆண்டு நாட்டின் கிழக்கில் மழை பெய்தபோது நூற்றுக்கணக்கான மக்களைக் காப்பாற்ற பல அவசரகால பதில் குழுக்கள் 24 மணிநேரமும் வேலை செய்ய வேண்டியிருந்தது.

போக்குவரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் “தற்போதுள்ள நடைமுறைகளை வலுப்படுத்துவதையும், அறிவுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்புத் தேவைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன” என்று அமைச்சகம் மேலும் கூறியது.

ஃபெடரல் டிராஃபிக் கவுன்சிலின் தலைவரான பிரிக்-ஜெனரல் இன்ஜினியர் ஹுசைன் அல் ஹர்தியின் கூற்றுப்படி, “ஆபத்து நிலை இருந்தபோதிலும்” மழையின் போது பள்ளத்தாக்குகளுக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த திருத்தப்பட்ட சட்டத்தில் உள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தெளிவாக கட்டுரையாக அரசால் வெளியிடப்பட்டுள்ளன. இதை சாலை பயனாளிகள், ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் தெளிவாக படித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

வாகன ஓட்டிகள் தங்கள் உயிருக்கோ, பிறர் உயிருக்கோ ஆபத்தை ஏற்படுத்தக் கூடாது. அவர்கள் போக்குவரத்து விதிமுறைகள், அடையாளங்கள் மற்றும் சிக்னல்களை கடைபிடிக்க வேண்டும், காவல்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க வேண்டும்.

அவர்கள் நியமிக்கப்பட்ட பாதைகளில் இருக்க வேண்டும், மேலும் அவசரகால சூழ்நிலைகளில் காவல்துறை, போக்குவரத்து, சிவில் பாதுகாப்பு, அவசரநிலை, பேரிடர் மற்றும் நெருக்கடி மேலாண்மை பணியாளர்களுக்கு வழி விட வேண்டும்.

அரசின் இந்த மாற்றப்பட்ட அபராதங்கள் பேரிடர் காலங்களில் மீட்பு பணியை இன்னும் துரிதமாக்குவதற்கு அரசு உதவிகரமாக இருக்கும் என்று பொதுமக்களிடையே பாராட்டப்பட்டு வருகின்றது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap