போலி மருந்துகளைக் கண்டறிய ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய செயலி…!

Fake medicines
New UAE app to detect fake medicines

போலியான மருந்து தயாரிப்புகளை பார்கோடு (barcode) ஸ்கேன் செய்து கண்டறியும் வகையில் ஸ்மார்ட்போன் செயலி விரைவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று சுகாதார மற்றும் நோய்தடுப்பு அமைச்சர் மத்திய தேசிய கவுன்சிலுக்கு (FNC) தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 11 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அப்துல் ரஹ்மான் பின் முஹம்மது அல் ஓவைஸ், போலியான மருந்துகளை எதிர்த்துப் போராட உதவும் புதிய செயலியை சுகாதார மற்றும் நோய்தடுப்பு அமைச்சகம் (Mohap) விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது என்று கூறினார்.

“சர்வதேச மருந்து மற்றும் மருத்துவ நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஸ்மார்ட் செயலியை அறிமுகப்படுத்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதில் மருந்து தயாரிப்புகள் அசல் அல்லது போலி என்பதை உறுதிப்படுத்த, தயாரிப்பு குறித்த சிறப்பு பார்கோடு ரீடிங் மூலம் மருந்துகளின் நம்பகத்தன்மை அல்லது உண்மையான தன்மையை இந்த செயலி வெளிப்படுத்தும்” என்று அல் ஓவைஸ் கூறினார்.

மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான கட்டுப்பாட்டின் மிக உயர்ந்த தரங்களை அரசாங்கம் பயன்படுத்துகிறது என்று அமைச்சர் வலியுறுத்தி கூறியுள்ளார்.

மேலும், அத்தகைய தயாரிப்புகளுக்கு எதிராக பிற நாடுகளின் முன்னெச்சரிக்கைகள் மற்றும் எச்சரிக்கைகள் உள்ளதா என்பதை தீர்மானிக்க, அதன் மாதிரி தயாரிப்புகளை வெளிப்புறமாகவும் அமைச்சகம் விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய அரபு அமீரகத்தில், சிறந்த மருத்துவ பொருட்கள் மற்றும் பாதுகாப்பான மருந்துகள் மட்டுமே சந்தைகளில் நுழைவதையும், அவை நுகர்வோருக்குக் கிடைப்பதையும் உறுதி செய்வதில் நாங்கள் முனைப்புடன் உள்ளோம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அல் ஓவைஸ் கூறுகையில், “கடந்த நான்கு ஆண்டுகளில், ஐக்கிய அரபு அமீரகம் போலியான மருத்துவ தயாரிப்புகளின் பல ஏற்றுமதிகளை நிறுத்தியுள்ளது மற்றும் பிற நாடுகளுக்கு அவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி குறித்த எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது. எங்கள் முயற்சிகள் இந்த நாட்டிற்குள் போலி தயாரிப்புகளை ஊக்குவிக்கும் மற்றும் தயாரிக்கும் வசதிகளை மூடிவிட்டன” என்றார்.

Loading...