UAE Tamil Web

பணி ஓய்வுபெறும் வெளிநாட்டவர்களுக்கு புதிய ரெசிடென்சி விசா – துபாய் ஆட்சியாளரின் அடுத்த அதிரடி..!

sheikh mohammed 1

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இன்று நடைபெற்ற அமீரக அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமீரகத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற வெளிநாட்டவர்களுக்கு புதிய ரெசிடென்சி விசா வழங்கும் விதிமுறைகளை துபாய் ஆட்சியாளர் அங்கீகரித்தார். இந்த சட்டம் குறித்தான விரிவான தகவல்கள் விரைவில் வெளிவரும் என நம்பப்படுகிறது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,” பணி ஓய்வு பெற்றவர்களும் அமீரகத்திலேயே தங்கலாம். அனைவரையும் நாங்கள் அமீரகத்திற்கு வரவேற்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமீரகத்தில் தானியங்கி வாகனங்களை பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. உள்துறை மற்றும் தானியங்கி அலுவலகங்கள் வெளியிட உள்ள அறிக்கையின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என துபாய் ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.

sheikh mohammed 1
9 Shares
Share via
Copy link