நடைமுறைக்கு வந்தது புதிய போக்குவரத்து விதி. மீறுவோருக்கு 400 திர்ஹம் அபராதம்.!

Major accident on Dubai's Sheikh Mohammed bin Zayed Road causes delays (Photo: Khaleej Times)

அபுதாபியில் உள்ள கிங் அப்துல்லா பின் அப்துல்லஸீஸ் தெருவில் (King Abdullah bin Abdulaziz Street) வலது லேன் டிசம்பர் 1 முதல் வாகன ஓட்டிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த தடைசெய்யப்பட்ட லேனில் அவசரகால வாகனங்கள், பொது போக்குவரத்து பேருந்துகள் மற்றும் டாக்சிகளுக்காக பிரத்தியேகமாக நியமிக்கப்படும் என்று அபுதாபி போலீஸ் போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குனரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இந்த விதிமுறை, தெருவில் இரு திசைகளிலும் செல்லும் வாகனங்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.

தடைசெய்யப்பட்ட இந்த லேனில் வாகனம் ஓட்டும், வாகன ஓட்டிகளுக்கு 400 திரகம் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Loading...