UAE Tamil Web

அரசு ஊழியர்களைப் போலவே தனியார் தொழிலாளர்களுக்கும் வேலை நேரம் ஒதுக்கிட அமீரக அரசு உத்தரவு..!

SHEIKH MOHAMMED

அமீரக மனிதவள மேம்பாடு மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி அமீரகத்தில் அரசு ஊழியர்களைப் போலவே தனியார் தொழிலாளர்களுக்கும் வேலை நேரங்கள் ஒதுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

ஒருநாளைக்கு 8 மணிநேரத்திற்கு மிகாமல் அல்லது வாரத்திற்கு 48 மணிநேரத்திற்கு மிகாமல் வேலை நேரம் ஒதுக்கப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஓவர் டைம் -ஐப் பொறுத்தவரையில் அதற்கான தொகை வழங்கப்பட வேண்டும்.

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு இடையே உள்ள பணி நடவடிக்கைகளை ஒன்றுபடுத்துதல் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பை ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் வெளியிட்டுள்ளார்.

மேலும் வார விடுமுறையைப் பற்றி பேசிய அமீரக மனிதவள மேம்பாடு மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சர் டாக்டர். அப்துல் ரஹ்மான் அல் அவார்,” தனியார் நிறுவனங்கள் தங்களது விருப்பப்படி வார விடுமுறையை நீட்டிக்கலாம். இருப்பினும் வாரத்தில் ஒருநாள் விடுமுறை கட்டாயமாகும். அமீரகத்தில் சில நிறுவனங்கள் புதிய வார விடுமுறைக் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ள. சில நிறுவனங்கள் வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளன. வீட்டிலிருந்தே பணிபுரியும் வாய்ப்பையும் சில நிறுவனங்கள் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.

 

SHEIKH MOHAMMED
19 Shares
Share via
Copy link