UAE Tamil Web

ஷார்ஜா: இனி பள்ளிகளுக்கும் வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை – குஷியில் மாணவர்கள்..!

school holidays

ஷார்ஜாவில் இயங்கிவரும் அனைத்து தனியார் பள்ளி மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு) விடுமுறை அளிக்கப்படும் என ஷார்ஜா தனியார் கல்வி ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

ஜனவரி 1, 2022 ஆம் தேதிமுதல் இந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஷார்ஜாவில் அரசுப் பணியாளர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள் எனவும் 3 நாட்கள் விடுமுறை விடப்படும் என அந்த எமிரேட் அரசு தெரிவித்திருந்தது.

உச்ச சபையின் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் டாக்டர் சுல்தான் பின் முகமது அல் காசிமி அவர்களின் உத்தரவின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பிற எமிரேட்களில் உள்ள அரசுப் பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை மதியம் துவங்கி ஞாயிறு வரையிலும் அரசு ஊழியர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

school holidays
6 Shares
Share via
Copy link