UAE Tamil Web

முக்கியச் செய்தி: அரசு ஊழியர்களுக்கும் தனியார் ஊழியர்களுக்கும் ஒரேமாதிரி விடுமுறைகளை அளிக்க ஷேக் கலீஃபா உத்தரவு..!

Sheikh Khalifa bin Zayed Al Nahyan

அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் புதிய அரசாணையை வெளியிட்டுள்ளார். இதன்படி அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வருடாந்திர விடுமுறை, மகப்பேறு விடுமுறை, குழந்தை வளர்ப்பு விடுமுறை, இரங்கல் காரணமாக அளிக்கப்படும் விடுமுறை மற்றும் கல்வி விடுமுறை ஆகியவை இனி தனியார் தொழிலாளர்களுக்கும் அளிக்கப்படவேண்டும் என அந்த ஆணை குறிப்பிடுகிறது.

கலீஃபா வெளியிட்ட இந்த அரசாணை எண் 47 (2021) வரும் பிப்ரவரி 2, 2022 ஆம் தேதிமுதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அரசு மற்றும் தனியார் தொழிலாளர்கள் வருடத்தில் பெறும் விடுமுறைகளின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • 60 நாட்கள் மகப்பேறு விடுப்பு (முழு ஊதியத்தில் 45 நாட்களும், பாதி ஊதியத்தில் கூடுதலாக 15 நாட்களும் அளிக்கப்படும்)
  • ஆண்களுக்கு 5 நாள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும்.
  • ஊழியரின் மனைவி இறந்தால் 5 நாள் விடுப்பும் மற்றும் நேரடி குடும்ப உறுப்பினர் இறந்தால் 3 நாட்கள் விடுமுறையும் அளிக்கப்படும்.
  • நோய்வாய்ப்பட்டால் வருடத்திற்கு 90 நாட்கள் விடுப்பு அளிக்கப்படும் (ஊதியத்துடன் 15 நாட்களும், 30 நாட்கள் பாதி ஊதியமும் வழங்கப்படும். அதற்கு மேல் எடுக்கப்படும் விடுமுறை நாட்களுக்கு ஊதியம் வழங்கப்படாது.)
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது நாட்டிற்கு உள்ளேயோ அல்லது வெளியில் உள்ள பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ள தொழிலாளர்கள் தங்களது தேர்வுகளுக்கு ஆண்டுக்கு 10 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.
Sheikh Khalifa bin Zayed Al Nahyan
34 Shares
Share via
Copy link