நமது துபாயின் பிரதான விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ், குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு வீட்டிலிருந்தே செக்-இன் செய்வதற்கான வசதியை வழங்கும் புதிய Home Check-In சேவையுடன் உலகத்தரம் வாய்ந்த தனது சேவையை இன்னும் ஒரு மேலே எடுத்துசென்றுள்ளது.
துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள எமிரேட்ஸின் முதல் வகுப்பு வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை இலவசமாக வழங்கப்படும் ஆவணச் சரிபார்ப்பு, பேக்கேஜ் செக்கிங்-இன் மற்றும் போர்டிங் பாஸ்கள் உள்ளிட்ட அனைத்து சம்பிரதாயங்களையும் முடிக்க, செக்-இன் முகவர்கள் முன் பதிவு செய்யப்பட்ட நேரத்தில் பயணிகளின் வீடுகள் அல்லது ஹோட்டல்களுக்குச் செல்வார்கள்.
மேலும் விமான நிலையத்தில் கடைசி நிமிட கூடுதல் லக்கேஜ்களுக்கு ஒதுக்கப்பட்ட கவுண்டர்களும் இந்த சேவையில் உள்ளது.
இந்த சேவையை அளிக்க வரும் முகவர்கள் சாமான்களை எடுத்துச் செல்வார்கள், அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப விமான நிலையத்திற்குச் செல்ல முன் பதிவு செய்த எமிரேட்ஸ் நிறுவனத்தின் டிரைவ் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
விமானம் புறப்படும் நேரத்திற்கு குறைந்தபட்சம் 24 மணிநேரம் முன்னதாகவே ஹோம் செக்-இன் சேவையை முன்பதிவு செய்திருக்க வேண்டும், மேலும் விமானம் புறப்படுவதற்கு ஆறு மணிநேரம் முன்னதாக வீட்டுச் சேவைக்கான புதிய செக்-இன் சேவையை பதிவு செய்ய வேண்டும்.