UAE Tamil Web

பிரம்மாண்ட வானவேடிக்கையில் 3 கின்னஸ் சாதனைகளைப் படைக்கவுள்ள அமீரகம் – எங்கே? எப்போது?

fireworks

அபுதாபியில் பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் ஷேக் சயீத் திருவிழாவில் இந்தப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 3 கின்னஸ் சாதனைகள் படைக்கப்பட இருக்கின்றன.

அல் வத்பா பகுதியில் புத்தாண்டு இரவின்போது 40 நிமிடங்கள் நீடிக்கும் அட்டகாசமான வானவேடிக்கைகளை நிகழ்த்த இருப்பதாக ஷேக் சயீத் திருவிழா நிர்வாகம் மற்றும் வானவேடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் கடந்தாண்டு ஷேக் சயீத் திருவிழாவில் 35 நிமிடங்களுக்கு வானவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டதே கின்னஸ் சாதனையாக இருந்தது.

அதுமட்டுமல்லாமல் ட்ரோன் மூலமாக வானில் Welcome 2022 என எழுதப்பட இருக்கிறது. உலகவரலாற்றில் ட்ரோன் கொண்டு இப்படி வானில் எழுதப்படுவது இதுவே முதல்முறையாகும்.

மேலும், எமிராட்டி பாடகர் ஈதா அல் மன்ஹாலி மற்றும் ஈராக்கைச் சேர்ந்த கலைஞர் அலி சபீர் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

ஏப்ரல் 1 ஆம் தேதிவரையில் நடைபெறும் இந்த ஷேக் சயீத் திருவிழா பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

fireworks
3 Shares
Share via
Copy link