UAE Tamil Web

புத்தாண்டை முன்னிட்டு துபாயில் பேருந்து, டிராம்கள் இயங்கும் நேரத்தில் மாற்றம் – RTA அறிவிப்பு..!

புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு மெட்ரோ மற்றும் டிராம்கள் இயங்கும் நேரத்தினை துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மாற்றியமைத்திருக்கிறது.

அதேபோல, நாளை டிசம்பர் 31 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஜனவரி 1 ஆம் தேதி (சனிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களிலும் துபாயில் உள்ள அனைத்து பொது பார்க்கிங் பகுதிகளில் மக்கள் இலவசமாக தங்களது வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம் என RTA தெரிவித்துள்ளது.

பொதுப் போக்குவரத்துகளிலும் புத்தாண்டு காரணமாக மாற்றக் கொண்டுவந்துள்ளது RTA அதன்படி,

மெட்ரோ

புத்தாண்டு அன்று மெட்ரோவின் கிரீன் மற்றும் ரெட்லைன்களில் நாள் முழுவதும் ரயில்கள் இயக்கப்படும்.

அதாவது வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு துவங்கும் சேவை ஜனவரி 2 ஆம் தேதி அதிகாலை 2.15 மணி வரையிலும் இடைவேளையின்றித் தொடரும்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிமுதல் அடுத்தநாள் அதிகாலை 1.15 மணிவரையில் மெட்ரோ இயக்கப்படும்.

டிராம்கள்

டிசம்பர் 31 காலை 9 மணி முதல் ஜனவரி 2 ஆம் தேதி அதிகாலை 1 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிமுதல் அடுத்தநாள் அதிகாலை 1 மணிவரையிலும் டிராம் சேவைகளை மக்கள் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள்

புத்தாண்டு அன்று துபாயில் பேருந்து இயக்கப்படும் நேரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கோல்ட் சூக் –  காலை 4.50 – அடுத்தநாள் காலை 1.22

அல் குபைபா –  காலை 4.26 – அடுத்தநாள் காலை 12.57

சத்வா – காலை 4.45 –  இரவு 11.50 (ரூட் C01 தவிர்த்து)

அல் குசைஸ் பேருந்து நிலையம் – காலை 4.50 – அடுத்தநாள் காலை 12.04

அல் கூஸ் இண்டஸ்ட்ரீயல் ஸ்டேஷன் – காலை 5.02  –  இரவு 11.30

ஜெபல் அலி ஸ்டேஷன் – காலை 4.58  –  இரவு 11.47

இன்டர் சிட்டி மற்றும் சொகுசுப் பேருந்துகள்

அல் குபைபா – காலை 6.40  –  இரவு 10.20

யூனியன் ஸ்கொயர் – காலை 4.25  – அடுத்தநாள் காலை 12.15

தேரா சிட்டி செண்டர் – காலை 6.40  –  இரவு11.30

அல் சப்கா – காலை 6.30  –  இரவு10.30

எதிசலாட் மெட்ரோ ஸ்டேஷன் – காலை 6  –  இரவு  9

அபு ஹெயில் ஸ்டேஷன் – காலை 6.30  –  இரவு 10.35

ஹட்டா ஸ்டேஷன் – காலை 5.30  –  இரவு 9.30

எக்ஸ்போ ரைடர் துபாய் நிலையங்களில் இருந்து வரும் அனைத்து பயணங்களும் டிசம்பர் 31 அன்று இரவு 10 மணிக்கு நிறுத்தப்படும், எக்ஸ்போ ரைடர் இன்டர்சிட்டி ஸ்டேஷன்களில் இருந்து வரும் பயணங்கள் இரவு 8 மணிக்கு நிறுத்தப்படும்.

ஜனவரி 1, சனிக்கிழமையன்று அவை மூடப்படும், ஆனால் மறுநாள் மீண்டும் திறக்கப்படும். RTA இன் வாடிக்கையாளர் சேவை மையங்கள் டிசம்பர் 31, வியாழன் முதல் ஜனவரி 2, ஞாயிறு வரை மூடப்படும். ஜனவரி 3 திங்கள் அன்று அவை மீண்டும் திறக்கப்படும்.

 

5 Shares
Share via
Copy link