UAE Tamil Web

அமீரக அரசுக்கு நியூசிலாந்து பிரதமர் நன்றி!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் அங்கிருந்து மக்கள் சாரை சாரையாக விமானங்கள் மூலம் வெளியேறி வருகின்றனர். ஆப்கனில் இருந்து விமானம் மூலம் ஏராளமான மக்கள் அமீரகம் வந்தடைய அரசு உதவிக்கரம் நீட்டியது.

இதனால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களுக்கு அமீரக அரசு அடைக்கலம் கொடுத்து சொந்த நாட்டிற்கு புறப்பட்டுச் செல்ல உதவியது. இதற்காக ஏற்கனவே ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் அமீரக அரசின் உதவிக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆடர்னும் அமீரக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஆப்கனில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான நியூசிலாந்து நாட்டினர் சொந்த மண் திரும்ப உதவிய அனைவருக்கும் நன்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட முறையில் நியூசிலாந்து நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரான பீனி ஹெனாரே அமீரக பாதுகாப்புத் துறை இணை அமைச்சரான முகமது பின் அஹ்மத் அல் பொவார்டியையும் அமீரகம் செய்த உதவிகளை சுட்டிக்காட்டி நன்றி பாராட்டியுள்ளார்.

0 Shares
Share via
Copy link