அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு வெறும் 269 திர்ஹம்ஸில் விமான டிக்கெட்.!

Air-India-Express-1-916x516

அமீரகத்திலிருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கு ஒரு அறிய வாய்பை அளித்துள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம். அதுவும் சாதாரண வாய்ப்பில்லை. பாமர மக்களின் பட்ஜெட்டில் அடங்கும் மிகப்பெரிய வாய்ப்பு.

அதாவது சமீபத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், அமீரத்திலிருந்து இந்தியா செல்வதற்கான விமான டிக்கெட்களை மிகவும் குறைந்த விலையில் அறிவித்துள்ளது. இந்த விளம்பரம் நேற்று முதல் (February 06 2020) February 10 2020 வரை நீடிக்கும் எனவும் அது தெரிவித்துள்ளது.

இந்த கவர்ச்சிகரமான தள்ளுபடியின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • ஷார்ஜா முதல் மும்பை செல்ல 269 திர்ஹம்ஸ் மட்டுமே
  • துபாயிலிருந்து மும்பை செல்ல 289 திர்ஹம்ஸ் மட்டுமே
  • துபாய் அல்லது ஷார்ஜாவிலிருந்து கேரளா மாவட்டம் கோழிக்கோடு செல்ல 279 திர்ஹம்ஸ் மட்டுமே.

இத்துடன் திருவனந்தபுரம், திருச்சிராப்பள்ளி, சூரத் போன்ற பல இந்திய நகரங்களும் இந்த அதிரடி விற்பனையில் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் அதிகபட்ச விலைகள் 390 திர்ஹம்ஸிற்கு மேல் இல்லை என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் விமான நிறுவனத்தின் அறிவிப்புப்படி, இந்த வாய்ப்பிற்கு சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும் மற்றும் பரிவர்த்தனை கட்டணம் பொருந்தும்.
இந்த அனைத்து கட்டணங்களும் ஒரு வழி பயணங்களுக்கானவை (One Way trip) என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...