புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு துபாய் மஹ்சூஸ் மெகா ரேஃபிள் டிரா நடத்தப்படுகிறது. இதில் நிசான் பேட்ரோல் கார் வெற்றி பெறும் ஒருவருக்கு வழங்கப்படுகிறது.
ரமலான் மாதத்தை முன்னிட்டு மஹ்சூஸ் மெகா ரேஃபிள் டிராவை நடத்த இருப்பதாக மஹ்சூஸ் குழுவின் தலைமை அதிகாரி அறிவித்துள்ளார். மஹ்சூஸில் கலந்துகொள்ளும் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு நிசான் பேட்ரோல் பிளாட்டினம் வி8, 5.6லி எஞ்சின் 2022 புதிய கார் பரிசாக வழங்கப்படுகிறது.
ரமலானை முன்னிட்டு ஏப்ரல் 30ஆம் தேதி நடக்கும் வழக்கமான டிராவில் பங்கேற்பாளர்கள், இந்த மெகா ரேஃபிள் டிராவில் நேரடியாக பங்கேற்கலாம். www.mahzooz.ae இணையதளத்தில் வார டிராவில் கலந்துகொள்பவர்கள் இந்த டிராவிலும் கலந்துகொள்ளலாம்.
மஹ்சூஸ் லைவ் டிராவின் வழக்கமான வாராந்திர டிராவில் AED 35 செலுத்தி கலந்துகொண்டு வெற்றி பெற்று பெறும் பரிசுத்தொகைகளுடன், ரமலான் மாதத்திற்கான மெகா ரேஃபிள் டிராவிலும் வென்று காரை தட்டிச்செல்லலாம்.