UAE Tamil Web

அமீரகத்தில் SPAM CALL-க்கு இனி வேலையில்லை – அரசு அதிரடி..!

அமீரகத்தில் முன்பின் தெரியாத நிறுவனங்களில் இருந்துவரும் அழைப்புகளின் பெயர் விரைவில் தெரியப்படுத்தப்படும் என தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அரசு ஒழுங்குமுறை ஆணையம் (TDRA) தெரிவித்துள்ளது.

அழைப்பாளரின் அலைபேசி எண் மொபைலில் பதிவேற்றப்படவில்லை என்றாலும், யார் அந்த அழைப்பாளர் என TDRA-வின் புதிய அம்சம் மூலம் இலகுவாகக் கண்டறிய முடியும். இதனால் முன்பின் தெரியாதவர்களிடம் அலைபேசியில் பதிலளிக்க வேண்டிய தேவை இருக்காது.

“பல திட்டங்களின் நடைமுறைகளை ஆய்வு செய்தபின் இந்த அம்சத்தை செயல்படுத்த முடிவு செய்தோம். மேலும் தொழில்நுட்ப சவால்களில் தீர்வை காணவும் நெட்வொர்க்குகளின் மாற்றங்களை சரி செய்யவும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது” என்று TDRA-வின் மேம்பாட்டு இயக்குனர் தெரிவித்தார்.

இந்த அம்சத்தை முதலில் வங்கித் துறையுடன் செயல்படுத்த தொடங்கிய TDRA, கல்வித்துறை, மருத்துவத்துறை போன்ற பிற துறைகளிலும் விரைவில் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் அனைத்து தனியார் துறை நிறுவனங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 Share
Share via
Copy link