UAE Tamil Web

இந்தியா – அமீரகம் இடையே மீண்டும் பயண சேவை எப்போது? – எதிஹாட் வெளியிட்ட அறிக்கை..!

Etihad_Air_

அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கும் எதிஹாட் ஏர்வேஸ் ஜூலை 21 ஆம் தேதிவரையில் இந்தியா – அமீரகம் இடையே விமானங்கள் இயக்கப்படாது எனத் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்த பயணி ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அந்நிறுவனம்,” இந்தியா – அமீரகம் இடையே பயண சேவை குறித்து பல குழப்பங்கள் இருப்பது உண்மைதான். பயண விதிமுறைகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களை நாங்கள் எதிர்பார்த்தோம். எங்களுக்குக் கிடைத்த சமீபத்திய தகவலின்படி இந்தியா – அமீரகம் இடையேயான விமானப் போக்குவரத்துத்தடை ஜூலை 21 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட தகவல்களை உடனுக்குடன் பெற எங்களது இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடவும்” எனத் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் துபாயை மையமாகக்கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஜூலை 7 ஆம் தேதிமுதல் இந்தியா – அமீரகம் இடையே விமான சேவையை துவங்க அனுமதியளிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் புதுப்பிக்கப்பட்ட பயண விதிமுறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிட காத்திருப்பதாகவும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Etihad_Air_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap