துபாய் புர்ஜ் கலிஃபாவில் இந்திய தேசிய கொடி காட்டப்படாதா??

Burj Khalifa

உலகின் மிக உயர்ந்த கட்டிடமான துபாய் புர்ஜ் கலிஃபாவில் அண்டை நாடுகளின் நட்பை போற்றும் வகையில் அந்நாட்டின் கொடிகள் அவ்வப்போது ஒளி பரப்பப்படும். மேலும், பல முறை இந்திய கொடியும் இங்கு ஒளிபரப்பப்பட்டுள்ளது.

ஆனால், சில பெரிய தொழில்நுட்ப காரணங்களால் இன்று இந்திய தேசிய கொடி ஒளிபரப்பப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது இந்தியர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

இது தொடர்பாக இந்திய தூதர் (Indian Ambassador) ட்விட்டர் பக்கத்தில் செய்த ட்வீட், “பெரிய தொழில்நுட்ப காரணத்தால் இந்திய தேசிய கொடியை இன்றிரவு ஒளிரச் செய்ய முடியாது என்பதை “EMAAR” நிறுவன நண்பர்கள் மூலம் நாங்கள் கற்றுக்கொண்டோம்.

இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நண்பர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான் என்று கூறியுள்ளார்.

அதேபோல், நேற்று பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் தேசிய கொடியும் ஒளிபரப்பப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading...