அமீரகத்தின் மிகப்பெரிய அபுதாபி ஹெல்த் சர்வீஸான SEHA, துபாய் சிட்டி வாக்கில் உள்ள டிரைவ் த்ரூ கொரோனா PCR பரிசோதனை சேவை மையத்தை நிரந்தரமாக நிறுத்தி உள்ளது.
இந்த நிலையில் துபாயில் PCR பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிகளை மேற்கொள்ள வேண்டிய குடியிருப்பாளர்கள் SEHA செயலியைப் பயன்படுத்தி அல் கவானீஜிலுள்ள SEHA-வின் கொரோனா டிரைவ் த்ரூ சேவை மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.
அமீரகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வருவதால் டிரைவ் த்ரூ சேவை மையம் மூடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த ஒரு சில நாட்களாக அமீரகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 400-க்கும் குறைவாகவே பதிவாகி வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.